“உங்களுக்கு யாரோ பில்லி, சூனியம் வெச்சிருக்காங்க!”.. சாமியார் சொன்னதை நம்பி ‘செயலில் இறங்கிய’ சென்னை டிரைவர்.. ‘மிஷன் முடிந்ததும்’ சாமியார் செய்த அடுத்த காரியம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பில்லி சூனியத்திலிருந்து காப்பாற்றுவதாக, நோயால் அவதிப்படும் குடும்பத்தினரிடம் கூறி நம்ப வைத்த போலி சாமியார் சிக்கியுள்ளார்.
ஒரு சாமியாரை நம்பி தான் பிழைப்புக்கு ஓட்டி வந்த மினி வேனை விற்று சென்னையை சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் 2 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராஜகுமாரன் என்பவர் சென்னையில் மகேந்திரா லோடு வேன் ஓட்டி வந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு மீனாட்சிபுரத்தில் இருந்து புளியங்குடி சென்று அங்கு சாலையோரத்தில் அமர்ந்திருந்தார் சாமியாரை பார்த்த ராஜகுமாரன் தனது குடும்பத்தினருக்கு உடல் நிலை சரி இல்லாததை குறிப்பிட்டு சோகமாக பேசியுள்ளார்.
இதனை பார்த்த சாமியார் உங்கள் குடும்பத்திற்கு பில்லி சூனியம் வைத்துள்ளார்கள், என்று கூறியதுடன், அவற்றை எடுப்பதற்கு பூஜை நடத்த வேண்டும் என்றும் கூறி 2 லட்ச ரூபாய் பணம் மற்றும் 2 கோழிகளை எடுத்துக்கொண்டு சென்னை வருமாறு கூறியுள்ளார். இதனை அடுத்து ராஜகுமாரன் தனது மினி வேனை 5 லட்சம் ரூபாய்க்கு விற்று புளியங்குடியில் இருந்து நண்பர் ஒருவருடன் காரில் சென்னைக்கு வந்து சாமியார் யுவராஜிடம் 2 லட்சம் ரூபாய் பணத்தையும் 2 கோழிகளையும் கொடுத்துள்ளார்.
இதைப்பெற்றுக் கொண்ட சாமியார் பூஜை பொருட்கள் வாங்கி வருவதாகச் சொல்லிச் சென்றவர் திரும்பி வரவேயில்லை. இதனை அடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜகுமாரன் சென்னை வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து சிசிடிவி கேமரா கட்சிகளை கொண்டு போலி சாமியார் யுவராஜ் என்பவரை கொருக்குப்பேட்டை காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் தேடிவந்தனர். இந்த நிலையில்தான் வேறு ஒருவருடன் சாமியார் யுவராஜ் நீண்ட நேரம் செல்போனில் பேசியதும், யுவராஜ் வேளச்சேரியில் பதுங்கி புதிதாக ஒருத்தருக்கு பில்லி சூனியம் எடுக்க பூஜை செய்து கொண்டிருப்பதும் தெரியவந்தது. உடனடியாக அங்கு விரைந்த போலீசார் பூஜைக்குத் தயாராக இருந்த யுவராஜ் மற்றும் அவருடைய கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.
யுவராஜுடன் அவருடைய காதலி ஜெயந்தி, காசிமேடு பாப்பா, அரக்கோணம் சுரேஷ், மதுரை அமர்நாத் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 30 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் கோழிகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். எனினும் தப்பி ஓடிய யுவராஜை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மற்ற செய்திகள்