"சசிகலா வெளியாகும் நேரம் வந்துவிட்டதா? வெளியான தேதி?" .. 'சமூக' வலைதளங்களில் பரவும் 'பரபரப்பு' தகவல் உண்மைதானா?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகர் உள்ளிட்ட 3 பேருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி, 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

"சசிகலா வெளியாகும் நேரம் வந்துவிட்டதா? வெளியான தேதி?" .. 'சமூக' வலைதளங்களில் பரவும் 'பரபரப்பு' தகவல் உண்மைதானா?

இதனை அடுத்து பிப்ரவரி 15-ஆம் தேதி மாலை, பெங்களூரு பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள சிறையில் இவர்கள் சிறை வைக்கப்பட்டனர். இந்த நிலையில் சசிகலா விடுதலையாவதாக ஒருதகவல் ஊடகங்களில் வெளியாகி வருகிறது.

முன்னதாக பாஜக பிரமுகரான ஆசீர்வாதம் ஆச்சர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், சசிகலா ஆகஸ்டு 14-ஆம் தேதி பெங்களூரு அக்ஹராக சிறையில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக ட்வீட் செய்திருந்தார். இதனை அடுத்து பல ஊடகங்களும் சமூக ஊடகங்களும், சசிகலா ஆகஸ்டு 14-ஆம் தேதி வெளியாகிறார் என்றே தகவல்களை வெளியிட்டிருந்தன.

ஆனால் சிறைச்சாலையின் நெருங்கிய காவல்துறை வட்டாரங்களின் தரப்பில் இருந்து, இந்த தகவல் முற்றாக மறுக்கப்பட்டுள்ளதோடு, இந்த தகவல் ஒரு வதந்தி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்