மாயமான 'பத்தாம்' வகுப்பு மாணவிகளின் விடைத்தாள்கள்... மீண்டும் நடந்த 'காலாண்டு' தேர்வு?... பரபரப்பை 'கிளப்பிய' சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடக்கவிருந்த பொதுத்தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும், அனைத்து மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு பொதுத் தேர்வுக்கான மதிப்பெண்களை கணக்கிட வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 15 க்கும் மேற்பட்ட பத்தாம் வகுப்பு மாணவிகளின் தமிழ் மற்றும் வேதியல் பாடங்களின் காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, சுமார் 15 மாணவிகள் பள்ளிக்கு அருகிலுள்ள ட்யூஷன் சென்டர் ஒன்றில் வைத்து காலாண்டு தேர்வை மீண்டும் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக இன்னும் சில மாணவிகள் தேர்வுகளை அந்த ட்யூஷன் சென்டரில் வைத்து தேர்வு எழுதிச் சென்று விட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலர் தெரிவிக்கையில், 'பள்ளிக்கு அருகிலுள்ள ட்யூஷன் சென்டர் ஒன்றில் மாணவிகளுக்கு தேர்வு நடப்பதாக வந்த தகவலின் படி நாங்கள் அங்கு சென்று சோதனை நடத்தினோம். ஆனால் அங்கு தேர்வு எழுதுவது போல் எதுவும் தோன்றவில்லை. மேலும், இதுகுறித்து விளக்கமளிக்க பள்ளி தலைமையாசிரியர், வேதியல் ஆசிரியர் மற்றும் அந்த கட்டிட உரிமையாளர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்' என தெரிவித்தார்.
காலாண்டுத் தேர்வு விடைத்தாள்களைக் கொண்டு பொது தேர்வு மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், 15 மாணவிகளின் விடைத்தாள்கள் மாயமாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்