'எமனாக வந்த கொரோனா'...'மனதை நொறுக்கிய அன்பு மகனின் திடீர் மரணம்'... கலங்க வைத்த மா.சுப்பிரமணியனின் உருக்கமான பதிவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனாவின் கோரப் பிடிக்குப் பலியான தனது மகன் குறித்து சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் தனது ட்விட்டர் பதிவில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியன் கடந்த செப்.28-ம் தேதி அன்று கொரோனா தொற்றுக்கு ஆளானார். பின்னர் அவரது மனைவிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் லேசான அறிகுறி இருந்ததால் இருவரும் வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டனர். இந்த சூழ்நிலையில் அவரது இரண்டாவது மகன் அன்பழகனிற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. மாற்றுத்திறனாளியான அன்பழகனுக்குத் தொற்று அதிகம் இருந்த காரணத்தால் சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்குத் தனியறையில் அனுமதிக்கப்பட்ட அன்பழகனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அன்பழகனுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்குக் கரோனா தொற்று நெகட்டிவ் என வந்தது. ஆனால், தொற்று பாதிப்பின் பின்விளைவு காரணமாக உடல்நலம் குன்றிய அன்பழகன் அக்டோபர் 17-ம் தேதி இன்று திடீர் மரணம் அடைந்தார். மகன் மறைவுக்கு மா.சுப்பிரமணியத்துக்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் ஆறுதல் கூறினார்கள்.
இதனிடையே, தற்போது தனது மகன் மறைவு குறித்து மா.சுப்பிரமணியன் தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ள பதிவு பலரையும் கலங்க வைத்துள்ளது. மகனுடன் இருக்கும் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ள மா.சுப்பிரமணியன், "கடந்த 35 ஆண்டுகளாக என் களைப்பைப் போக்கிய அருமருந்து என் "அன்பு" என உருக்கத்துடன் கூறியுள்ளார்.
கடந்த 35 ஆண்டுகளாக என் களைப்பை போக்கிய அருமருந்து என் "அன்பு".... pic.twitter.com/Ys1H0vov93
— Subramanian.Ma (@Subramanian_ma) October 19, 2020
மற்ற செய்திகள்