அப்படிப்போடு .. இனி பேருந்துகளில் Gpay மூலம் இ-டிக்கெட்.. தமிழக அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்..முழுவிபரம்.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் இ-டிக்கெட் வசதி பயன்பாட்டிற்கு வரும் என தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் S S சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அப்படிப்போடு .. இனி பேருந்துகளில் Gpay மூலம் இ-டிக்கெட்.. தமிழக அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்..முழுவிபரம்.!

Also Read | எரிமலையை சுத்தி ஒரே நாள்ல 77 முறை நிலநடுக்கம்.. "ஏதோ வித்தியாசமா நடக்குது..யாரும் கிட்ட போய்டாதீங்க".. எச்சரிக்கும் ஆய்வாளர்கள்..!

இணையவசதி பெருகிவிட்ட இந்த காலத்தில், பணப்பரிவர்த்தனை எளிதான விஷயமாக மாறிவிட்டது. புதிய இடங்களுக்கு செல்லும்போது, பணத்தைனை கையில் எடுத்துச் செல்லவேண்டிய அவசியம் இல்லாமல் ஆகிவிட்டது. மின்னணு பரிவர்த்தனை பரவலாகிவிட்ட காரணத்தினால் ஒரே கிளிக்கில் நாம் செலுத்தவேண்டிய கட்டணத்தை செலுத்திவிட முடிகிறது. அந்த வகையில் விரைவில் தமிழக பேருந்துகளில் இ-டிக்கெட் வழங்கும் சேவை துவங்கப்படும் என அமைச்சர் S S சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

eTicket will be introduced in Tamilnadu Buses says Minister

இ-டிக்கெட்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் S S சிவசங்கர்," பேருந்துகளில் இந்தாண்டு இறுதிக்குள் வழக்கமான பயணச்சீட்டிற்கு பதிலாக இ- டிக்கெட் அறிமுகப்படுத்தப்படும். இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தவுடன் ஜி பே, மொபைல்  ஸ்கேனிங் மூலமாக பேருந்துகளில் டிக்கெட் பெறும் வசதி கொண்டுவரப்படும். இதன் மூலம் பயணிகள் நேரடி பண பரிமாற்றத்தை தவிர்த்துக் கொள்ளலாம்" என்றார்.

புதிய ஸ்மார்ட் கார்டு

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் இலவசமாக பள்ளிகளுக்கு சென்றுவர இலவச பஸ்பாஸ் திட்டத்தை பல ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு. இந்நிலையில், மாணவர்களுக்கு இலவச பயணத்திற்கான புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட இருப்பதாக அறிவித்துள்ளார் அமைச்சர் S S சிவசங்கர்.

eTicket will be introduced in Tamilnadu Buses says Minister

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,"பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் பயணம் செய்ய ஸ்மார்ட் கார்ட் வழங்கப்படும். ஸ்மார்ட் கார்ட் வழங்குவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட் அட்டை வழங்கப்படும் வரை மாணவ மாணவிகள் ஏற்கனவே கொடுக்கப்பட்டு இருந்த பழைய ஸ்மார்ட் கார்டு அட்டைகளை பயன்படுத்தி பேருந்துகளில் பயணம் செய்து கொள்ளலாம்" என்றார்.

eTicket will be introduced in Tamilnadu Buses says Minister

பேருந்துகளில் இ-டிக்கெட் வழங்கும் முறை வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துவந்த நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் இ-டிக்கெட் வழங்கப்படும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது, பொதுமக்களை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.

Also Read | "குரங்கு அம்மையை தடுக்கணும்னா இந்த 5 விஷயத்தையும் உடனடியா செஞ்சாகனும்".. உலக நாடுகளுக்கு WHO கொடுத்த எச்சரிக்கை..!

ETICKET, TAMILNADU BUSES, MINISTER SIVASHANKAR, TN GOVT

மற்ற செய்திகள்