Ethirneechal : "அந்த Scene-அ எழுதுனது நான்.. நடிகர்ட்ட ஏன் கேக்குறாங்க" ─ சர்ச்சை காட்சிகள் குறித்து‘எதிர்நீச்சல்’ இயக்குநர் Exclusive

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சன் டிவியில் தற்போது புதிதாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. மக்கள் மத்தியில் இன்று வரை பேசப்பட்டு வரக் கூடிய 'கோலங்கள்' தொடரை எடுத்ததுடன், 'கோலங்கள்' சீரியலில் அனைவரின் மனம் கவர்ந்த தொல்ஸ் (தொல்காப்பியன்)என்கிற கேரக்டரில் நடித்தவரான, இயக்குநர் திருச்செல்வம் தான், 'எதிர்நீச்சல்' தொடரையும் தற்போது இயக்கி வருகிறார்.

Ethirneechal : "அந்த Scene-அ எழுதுனது நான்.. நடிகர்ட்ட ஏன் கேக்குறாங்க" ─ சர்ச்சை காட்சிகள் குறித்து‘எதிர்நீச்சல்’ இயக்குநர் Exclusive

Also Read | சென்னை : இருசக்கர வாகனத்துக்கு வாட்டர் வாஷ் செய்த இளைஞர் மின்சாரம் பாய்ந்து பலி !! பதைபதைப்பு சம்பவம்..

இந்த சீரியலில் இடம்பெற்றிருந்த காட்சி ஒன்று, தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் சர்ச்சையை ஏற்படுத்தியதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த காட்சியின் உண்மை பின்னணி குறித்தும், சிலர் மத்தியில் அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது குறித்தும் எதிர்நீச்சல் சீரியலின் இயக்குநர் திருச்செல்வம் பிஹைண்ட்வுட்ஸ் சேனலில் பிரத்தியேகமாக பேசியுள்ளார்.

அதில், “திருமணங்களில் இடம்பெறும் தற்போதைய இளைஞர்களின் கலாச்சாரம் குறித்தும், Wedding போட்டோகிராஃபர் பற்றியும் நடிகர் மாரிமுத்து பேசிய வசனங்கள், சிலர் மத்தியிலும் சில அமைப்புகள் மத்தியிலும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், எதிர்நீச்சல் சீரியலின் இயக்குநர் திருச்செல்வம், தம்முடைய சீரியலில் வரும் இந்த காட்சி குறித்து விளக்கத்தினை 'Behindwoods' சேனலுக்கு பிரத்தியேக பேட்டியில் அளித்துள்ளார்.

அதில் பேசிய அவர், “அந்த கருத்து, எதிர்நீச்சல் தொடரின் மையக்கருத்து கிடையாது. நம் தொடரின் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் ஒருவர் பேசுவது. பழமைவாதத்தில் இருக்கும் ஒரு கதாபாத்திரம் தான் ஆதி குணசேகரன். அவர்தான் அந்த வசனத்தை பேசுகிறார். அந்த கதாபாத்திரத்தின் தன்மையே அதுதான். இந்த கால இளைஞர்கள் குறித்த இம்மாதிரியான விஷயங்களை கண்டு எரிச்சல் அடைவதே அந்த கேரக்டர். 

ஆனால் அந்த கேரக்டரில் நடிப்பவர் ஒரு நடிகர். அவர் அந்த கருத்துக்கு எதிரானவரகவும் கூட இருக்கலாம். என்ன காட்சி, வசனங்கள் என்று அவருக்கு அன்று காலை திருமண மண்டபத்துக்கு வந்த பின்னரே தெரியவரும். ஆனால் அவரிடத்தில் இதுபற்றி கேள்வி எழுப்பினார்கள் ஊடகத்தினர். டைரக்டராகிய நானே அப்படியான காட்சியை எழுதினேன். அது யாருடைய ஐடியாவும் இல்லை. அது அந்த கேரக்டரின் குணாதிசயம். பட்டம்மாள் கேரக்டரில் நடிப்பவரிடம் கூட, நீங்கள் நாத்திக புரட்சி பேசுபவரா என கேட்டார்கள். ஆனால் அவர் நல்லா சாமி கும்பிட கூடியவர்.

இதே காட்சிக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றனர். ஆனால், நான் பாராட்டுக்கோ, விமர்சனத்துக்கோ, அந்த காட்சியை உருவாக்கவில்லை. கதை நகர்வுக்காக உருவான காட்சி தான் அது. நகர்ப்புறங்களில் எப்போதாவது சீரியல் பார்க்கும் சிலர் திடீரென இப்படி ஒரு காட்சியை பார்த்துவிட்டு இப்படி குழப்பம் அடைவதை காண முடிகிறது.

ஆனால் என்னுடைய முந்தைய சீரியல்களை போலவே, எதிர்நீச்சல் சீரியலுக்கும் கிராமப்புறம், நகர்ப்புறம் உள்ளிட்ட அனைத்து தரப்பு பார்வையாளர்களிடமும் இருந்து நல்ல வரவேற்பு இருப்பதை காண முடிகிறது. கொஞ்ச நாளாக சீரியல் பார்க்காமல் இருந்தவர்கள் கூட, மீண்டும் எதிர்நீச்சல் பார்ப்பதாக சொன்னார்கள், அது மகிழ்ச்சி அளிக்கிறது!” என குறிப்பிட்டுள்ளார்.

Also Read | மீண்டும் அதிர்ச்சி.. காரில் சிக்கி 500 மீட்டர் இழுத்து செல்லப்பட்ட உணவு டெலிவரி ஊழியர்.. பதைபதைப்பு சம்பவம்!!

ETHIRNEECHAL, THIRUSELVAM, SERAL UPDATES, SUN TV SERIAL

மற்ற செய்திகள்