தமிழகத்தின் அத்தியாவசியப் பணிகள் பட்டியலில் செய்யப்பட்ட மாற்றங்களை திரும்பப் பெற்றது தமிழக அரசு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தின் அத்தியாவசியப் பணிகள் பட்டியலில் மாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது அந்த அரசாணையை தமிழக அரசு திரும்பப்பெற்றுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் சில துறைகள் மட்டுமே அத்தியாவசியப் பணிகளுக்காக இயங்கி வருகின்றன. இந்நிலையில், அத்தியாவசியப் பணிகளின் பட்டியலில் மாற்றங்கள் செய்து தமிழக அரசின் தலைமை செயலாளர் உத்தரவிட்டிருந்தார்.
அந்த அறிக்கையில், "புதுப்பிக்கப்பட்ட பட்டியலில் இரும்பு, சிமெண்ட், உரம், ரசாயனம், ஜவுளி, சர்க்கரை, காகிதம், வேதியியல் பொருட்கள், டயர், கண்ணாடி, தோல் பதனிடுதல், சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட 13 தொழிற்சாலைகளை அத்தியாவசியப் பணிகளாக இணைக்கப்பட்டுள்ளன.
மேலும், குறைவான தொழிலாளர்களைக் கொண்டு ஆலைகளை இயக்கலாம்" எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், திடீரென அந்த அரசாணையை தமிழக அரசு திரும்பப்பெற்றுள்ளது.