தாய்க்கு ‘மெசேஜ்’ அனுப்பிவிட்டு... ‘திருமணமான’ ஐந்தே ஆண்டுகளில் இளம்பெண் எடுத்த ‘முடிவு’... கணவருக்கு காத்திருந்த ‘பேரதிர்ச்சி’...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஈரோட்டில் தாய்க்கு போனில் மெசேஜ் அனுப்பிவிட்டு இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தாய்க்கு ‘மெசேஜ்’ அனுப்பிவிட்டு... ‘திருமணமான’ ஐந்தே ஆண்டுகளில் இளம்பெண் எடுத்த ‘முடிவு’... கணவருக்கு காத்திருந்த ‘பேரதிர்ச்சி’...

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த தம்பதி சதீஷ்குமார் (28) - சத்யா (26). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் இவர்களுக்கு  2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சத்யாவுக்கும், சதீஷ்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறால் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்குச் சென்ற சத்யா 2 மாதங்களுக்கு முன்புதான் மீண்டும் கணவருடன் வந்து வசிக்கத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்க சென்றுள்ளனர். பின்னர் அடுத்த நாள் காலை சதீஷ்குமார் எழுந்து பார்த்தபோது சத்யா வீட்டில் தொட்டில் கட்டும் கம்பியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதைப் பார்த்து அதிர்ந்துபோன அவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதற்கிடையே தனது தாய் பூங்கொடிக்கு நேற்று காலை சத்யா செல்போனில் மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தனது மரணத்திற்கு கணவரே காரணம் என இருந்துள்ளது. அதைப்பார்த்து உடனே பதறியடித்து அவருடைய தாய் ஓடிவந்துள்ளார். ஆனால் அதற்குள் சத்யா இறந்திருக்க, மகளின் உடலை பார்த்த அவர் கதறி அழுதுள்ளார். இதைத்தொடர்ந்து அவருடைய உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து பூங்கொடி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.

SUICIDEATTEMPT, ERODE, WOMAN, HUSBAND, MOTHER