மரணமடைந்த ஈரோடு MLA திருமகன் ஈவெரா.. ஒரு வகையில் பெரியாரின் கொள்ளுப் பேரனா..? - முழு விபரம்.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மரணமடைந்த ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா, ஒரு வகையில் பெரியாரின் கொள்ளுப் பேரன் ஆவார்.

மரணமடைந்த ஈரோடு MLA திருமகன் ஈவெரா.. ஒரு வகையில் பெரியாரின் கொள்ளுப் பேரனா..? - முழு விபரம்.!

Also Read | "நடுவரிடம் கோபப்பட்டாரா தீபக் ஹூடா?".. முடிவால் கடுப்பான வீரர்.. பரபரப்பு சம்பவம்!!

இவரது மறைவுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்து உள்ளார். அதில், "ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் திரு. திருமகன் ஈவெரா அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். தந்தை பெரியார் பாரம்பரியத்தில், சொல்லின் செல்வர் திரு. ஈ.வெ.கி. சம்பத் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் ஆகியோரின் அரசியல் பாதையைப் பின்பற்றி, முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞராக காங்கிரஸ் கட்சியில் மிகச் சிறப்பாக பணியாற்றியவர். சமூக ஊடகத்துறையில் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் கருத்துகளை பரப்பியவர்.

Erode East MLA Thirumahan Everaa grandson to EVR Periyar

46 வயது மட்டுமே நிரம்பிய அவரது மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது தந்தையார் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சி நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கனத்த இதயத்துடன் அனுதாபத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்". என குறிப்பிட்டுள்ளார்.

Erode East MLA Thirumahan Everaa grandson to EVR Periyar

திருமகன் ஈவெராவின்  இயற்பெயர் ராம். இவர் பெரியாரின் அண்ணன் ஈ. வெ. கிருஷ்ணசாமியின் கொள்ளுப்பேரனும் அவர் மகன் ஈ. வி. கே. சம்பத்தின் பேரனும் ஆவார். அந்த வகையில் திருமகன் ஈவெரா பெரியாரின் கொள்ளுப் பேரன் ஆவார்.

இவர் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளராக உள்ளார். மேலும் இவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர் ஆவார்.

Erode East MLA Thirumahan Everaa grandson to EVR Periyar

கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளர் யுவராஜாவை வென்றார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் "தந்தை பெரியாரின் கொள்ளுப்பெயரனும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான திருமகன் ஈவேரா மாரடைப்பால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். 46 வயதே ஆன அவர் இளம் வயதிலேயே காலமானதை மனம் ஏற்க மறுக்கிறது.

Erode East MLA Thirumahan Everaa grandson to EVR Periyar

திருமகன் ஈவேரா அரசியலில் மிக உயர்ந்த இடங்களை அடைந்திருக்க வேண்டியவர். அவரது அகால மரணம் அந்த வாய்ப்புகளை பறித்து விட்டது. அவரை இழந்து வாடும் தந்தை ஈ.வே.கி.ச இளங்கோவன் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

Also Read | அதிர்ச்சி! ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா MLA திடீர் மரணம்! 

ERODE EAST MLA, THIRUMAHAN EVERAA, ERODE EAST MLA THIRUMAHAN EVERAA, EVR PERIYAR

மற்ற செய்திகள்