மதுசூதனனை சந்திக்க சசிகலா - இபிஎஸ் ஒரே நேரத்தில் வருகை!.. உச்சகட்ட பரபரப்பில் அதிமுக தொண்டர்கள்!.. திக் திக் நிமிடங்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல்நலம் குறித்து விசாரிக்க எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலா ஒரே நேரத்தில் வருகை தந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மதுசூதனனை சந்திக்க சசிகலா - இபிஎஸ் ஒரே நேரத்தில் வருகை!.. உச்சகட்ட பரபரப்பில் அதிமுக தொண்டர்கள்!.. திக் திக் நிமிடங்கள்!

முன்னாள் அமைச்சரும், அதிமுக அவைத்தலைவருமான இ.மதுசூதனன் (வயது 80) கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல்நலம் தேறினார். அதன்பிறகு வயது முதிர்வு காரணமாக அவர் அரசியல் பணிகளில் இருந்து ஒதுங்கினார்.

எனினும், அவ்வப்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மதுசூதனன் உடல்நிலை திடீரென மோசம் அடைந்தது. இதையடுத்து அவர், சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது, டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் மதுசூதனனின் உடலில் பல உறுப்புகள் செயலிழந்து இருப்பது தெரியவந்தது. தற்போது அவர் தீவிர சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 'வென்டிலேட்டர்' பொருத்தப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எனினும், மதுசூதனன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இன்று காலை மருத்துவமனைக்கு சென்று அவர் உடல் நலம் விசாரித்தார்.

அவரைத் தொடர்ந்து, மதுசூதனன் உடல் நலம் குறித்து விசாரிக்க எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வரப்போவதாக தகவல் வெளியானது. அதே நேரத்தில் சசிகலாவும் வர இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு நேரில் சென்று எடப்பாடி பழனிசாமி டாக்டர்களிடம் மதுசூதனன் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.

அதுபோல், அதிமுக கொடி பொறுத்தப்பட்ட காரில் சசிகலா மருத்துவமனை வந்துள்ளார். எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்து விட்டு வெளியே செல்லும் வரை காரில் காத்திருந்த சசிகலா, பின்னர் மருத்துவமனை சென்று அங்கு டாக்டர்களிடம் மதுசூதனன் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.

 

மற்ற செய்திகள்