“அப்ளை பண்ற எல்லாருக்கும் இ-பாஸ்!!”.. ‘மாவட்ட எல்லைகளை’ கடக்க ‘இ-பாஸ்’ அவசியமா? - போலீஸ் சொல்வது என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மாவட்ட எல்லைகளை கடந்து செல்வதற்கு இ-பாஸ் கட்டாயம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைக்காக தமிழகம் முழுவதும் பொதுப் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டதுடன் திருமணம், மருத்துவம், இறப்பு அல்லது வெளியூரில் சிக்கி தவிப்பவர்கள் உள்ளிட்ட நான்கு காரணங்களுக்காக மட்டுமே தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இ-பாஸ் வழங்கப்படுகிறது.

“அப்ளை பண்ற எல்லாருக்கும் இ-பாஸ்!!”.. ‘மாவட்ட எல்லைகளை’ கடக்க ‘இ-பாஸ்’ அவசியமா? - போலீஸ் சொல்வது என்ன?

இதனிடையே இ-பாஸ் அமைப்பில் நிறைய சிக்கல்களை உணர்வதாகக் கூறப்பட்டதுடன் பலத்த எதிர்ப்பும் கிளம்பியது. இந்த நிலையில் நாளை முதல் இ-பாஸ் கேட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை தொடர்ந்து இ-பாஸ் இல்லாமல் மாவட்ட எல்லைகளை கடந்து செல்வதற்கு பலர் முற்பட்டனர். ஆனால் மாவட்ட எல்லைகளில் சோதனை நடத்தும் போலீசார் இ-பாஸ் இல்லாமல் வருபவர்களை தடுத்து நிறுத்தியதோடு திருப்பி அனுப்பியும் வருகின்றனர்.

இதற்கு விளக்கம் அளித்த போலீசார், “விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். இ-பாஸ் இல்லாமல் செல்லலாம் என்று கூறவில்லை. ஆகவே சாலை மார்க்கமாக வாகனங்களில் மாவட்ட எல்லைகள் கடந்து செல்பவர்கள் கட்டாயம் இ-பாஸ் வைத்திருத்தல் அவசியம். அவ்வாறு இல்லாமல் போலீசாருடன் வாக்குவாதம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

மற்ற செய்திகள்