அரசு பள்ளியில் ஆங்கில வழி பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
6 -ம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் ஆங்கில வழி பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் முதலில் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த கட்டணத்தை ரத்து செய்யக்கோரி கோரிக்கை எழுந்தது. அதனை ஏற்று அமைச்சர் செங்கோட்டையன் சட்டபேரவையில் 6 முதல் 12 -ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் ரத்து செய்யப்படும் என அறிவித்தார்.
இதன்மூலம் தேசிய அளவில் ஆங்கில மொழியில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ள முடியும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அரசுக்கு பரித்துரைத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் பின்பற்றி நடப்பு கல்வியாண்டு முதல் ஆங்கில வழி கட்டணத்தை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.