'சாலையோரம் கட்டப்பையில் கிடந்த பச்சிளங்குழந்தை'... 'பிறந்து 7 நாளே ஆன நிலையில் நடந்த பரிதாபம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சாலையோரம் கிடந்த பையில் அழுதுக் கொண்டிருந்த பச்சிளங் குழந்தையை, கல்லூரி மாணவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை - பொள்ளாச்சி சாலையில் உள்ள, தனியார் கல்லூரியில் படித்து வரும் ர்ந்த மணவர்கள் சந்திரசேகர் மற்றும் சத்தியதரன். இவர்கள் இருவரும் நேற்றிரவு தேர்வுக்கான புத்தகங்களை வாங்கிக் கொண்டு கலைக் கல்லூரி சாலை வழியாக சென்றுள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் பச்சிளம் குழந்தை ஒன்று கதறி அழும் சத்தம் கேட்டுள்ளது. அக்கம் பக்கத்தில் யாருமின்றி வெறிச்சோடி இருந்ததால் மாணவர்கள் சத்தம் வரும் இடத்தை நோக்கி சென்றுள்ளனர்.
அப்போது அரசு மருத்துவமனையின் பின் வாசலின் அருகே உள்ள நடைபாதையில் ஒரு கட்டப்பையில் பிறந்து 7 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த மருத்துவமனை 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
குழந்தையின் பெற்றோர் யார், சாலையில் எப்படி குழந்தை வீசப்பட்டது, யாராவது கடத்தி வந்தபோது ஆட்கள் நடமாட்டத்தால் போட்டுச்சென்றார்களா என்பது குறித்து ரேஸ் கோர்ஸ் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.