‘நிவர் புயலால் பாதிக்கப்பட்டவர்கள்’... 'அவசர கால உதவி எண்ணான’... ‘இந்த நம்பரையும் பொதுமக்கள் பயன்படுத்தலாம்’... வெளியான அறிவிப்பு...!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நிவர் புயல் காரணமாக பேரிடர் அவசர கால எண் 112-ஐ பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புயல் கரையை கடக்கும்போது, மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடலூர் மற்றும் புதுச்சேரி துறைமுகத்தில் 10-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்தப் பேரிடர் நேரத்தில் தொலைத் தொடர்பு சேவைகள் துண்டிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி நடந்தால் செல்ஃபோன்களில் நெட்வொர்க் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம். அதனால் அவசரகால உதவிக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் கட்டுப்பாட்டு உதவி மையங்களின் தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
புயல் நேரத்தில் அவசரகால உதவி தேவைப்படுபவர்கள் அச்சமின்றி பதட்டப்படாமல் அவசரகால உதவி எண்ணான ‘112’-ஐ தொடர்பு கொள்ளலாம். இந்த ஒரே எண்ணை கொண்டு போலீஸ், தீயணைப்பு மற்றும் மருத்துவ மாதிரியான அவசரகால உதவி எண்களை எளிதில் அணுகலாம். பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாது பாதிப்படைந்தவர்களுக்கு உதவ விரும்புவோர் 112-ஐ தொடர்புகொண்டு விவரத்தை சொல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்