‘மேய்ச்சலுக்கு வந்த யானை’.. ‘எதிர்பாராமல் நடந்த ஒரு சம்பவம்’.. சோகத்தில் மூழ்கிய மக்கள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பொள்ளாச்சியில் மேய்ச்சலுக்காக வந்த யானை அகழியை கடக்க முயன்றபோது தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘மேய்ச்சலுக்கு வந்த யானை’.. ‘எதிர்பாராமல் நடந்த ஒரு சம்பவம்’.. சோகத்தில் மூழ்கிய மக்கள்..!

பொள்ளாச்சி அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் யானை ஒன்று நேற்றிரவு மேய்ச்சலுக்காக வந்துள்ளது. அப்போது அங்கிருந்த அகழி ஒன்றை கடக்க முயன்றுள்ளது. அப்பகுதியில் மழை பெய்துகொண்டிருந்ததால் அகழியில் சறுக்கி விழுந்திருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதில் யானையின் தலை, மார்பு பகுதியில் பலத்த அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இதனை அந்த வழியாக சென்ற மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை அடுத்து உடனடியாக அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் யானையின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். ஒரே ஆண்டில் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பெண் யானை உட்பட 4 யானைகள் இதுபோல் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. மேய்ச்சலுக்கு வந்த யானை அகழியில் சறுக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

COIMBATORE, POLLACHI, ELEPHANT, DIES