"233 ஆவது தோல்வி".. வாக்களிச்ச 6 பேருக்கும் நன்றி, மகிழ்ச்சியா இருக்கு.. தேர்தல் மன்னன் பத்மராஜனின் அதிரடி ஸ்பீச்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சமீபத்தில் நடைபெற்ற சூழலில், EVKS இளங்கோவன் வெற்றி பெற்றிருந்தார்.

"233 ஆவது தோல்வி".. வாக்களிச்ச 6 பேருக்கும் நன்றி, மகிழ்ச்சியா இருக்கு.. தேர்தல் மன்னன் பத்மராஜனின் அதிரடி ஸ்பீச்!!

Also Read | "ஆன்லைனில் பணம் அனுப்புறேன்".. ஸ்மார்ட் டிவியை திருடிச்சென்ற ஸ்மார்ட் இளைஞர்...!

ஈரோடு இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத் தேர்தல் கடந்த 27 ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்தது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஸ் இளங்கோவன் தேர்தலில் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த இடை தேர்தலில் அதிமுக சார்பில் கேஎஸ் தென்னரசுவும், தேமுதிக சார்பில் ஆனந்த் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் போட்டியிட்டனர்.

Election King Padmarajan about erode east bypoll elections

Images are subject to © copyright to their respective owners.

மேலும் இந்த இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே ஈவிகேஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

வெற்றிபெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம், 39 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழக சட்ட மன்றத்திற்குள் நுழைய இருக்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன். முன்னதாக கடந்த 1984 ஆம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு சட்ட மன்ற உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Election King Padmarajan about erode east bypoll elections

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில், ஈரோடு இடைத்தேர்தலில் 'தேர்தல் மன்னன்' பத்மராஜன் போட்டியிட்ட விஷயம் அதிகம் வைரலாகி வருகிறது.

'தேர்தல் மன்னன்' பத்மராஜன்

சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் கே. பத்மராஜன். தேர்தலில் வேட்பாளராக நிற்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர், கடந்த 1988 ஆம் ஆண்டு முதல் வேட்புமனுவை தாக்கல் செய்ய ஆரம்பித்தார். மேலும் உள்ளாட்சி தேர்தல் தொடங்கி, நகராட்சி, சட்டப் பேரவை, நாடாளுமன்ற மக்களவை தேர்தல், இடைத் தேர்தல் என எதையும் அவர் விடவே மாட்டார்.

கடந்த 35 ஆண்டுகளில் இதுவரை 233 முறை தேர்தலில் வேட்பாளராக நின்றுள்ள பத்மராஜன், ஒன்றில் கூட வெற்றி பெற்றதில்லை. ஆனாலும் தொடர்ந்து தேர்தலில் ஈடுபாடு கொண்டு தன்னை வேட்பாளராக முன்னிறுத்தியும் வருகிறார் பத்மராஜன். தான் தோல்வி அடைய போகிறோம் என்பது தெரிந்தே வேட்புமனு தாக்கல் செய்யும் பத்மராஜன், அதிகம் முறை வேட்புமனு தாக்கல் செய்ததற்காகவே கின்னஸ், லிம்கா சாதனையும் படைத்துள்ளார். அப்படி இருக்கையில், சமீபத்தில் நடந்த ஈரோடு இடை தேர்தலிலும் பத்மராஜன் களமிறங்கி இருந்தார்.

Election King Padmarajan about erode east bypoll elections

Images are subject to © copyright to their respective owners.

கெடச்சது 6 ஓட்டு

ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பாளராக நின்றது பற்றி பேசி இருந்த தேர்தல் மன்னன் என அறியப்படும் பத்மராஜன், "இடைத்தேர்தலில் 76 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாங்க. இந்த மாதிரி ஒரு பரபரப்பான தேர்தலை நான் என் வாழ்நாளில் பார்த்ததில்லை. 35 வருஷமா நான் தேர்தல் களத்தில் இருக்கிறேன். எல்லாரும் மக்கள் மனதில் இருக்கக்கூடிய தேர்தலா இது அமையுது. எனக்கு ஆறு பேர் ஓட்டு போட்டு இருக்காங்க, எனக்கு மிகப்பெரிய வெற்றி தான் அது. என்னை இந்த தொகுதில யாருன்னே தெரியாது. இருந்தாலும் என்னை நம்பி ஆறு பேர் ஓட்டு போட்டு இருக்காங்க. அந்த ஆறு பேருக்கு என்னோட நன்றியை நான் தெரிவிச்சுக்குறேன்" என குறிப்பிட்டார்.

மேலும் தான் தேர்தலில் நின்ற இடங்களில், 1000 வாக்குகள் வரை கிடைத்துள்ளதாகவும், மற்ற சில இடங்களில் ஒரு வாக்கு கூட கிடைக்காத இடம் கூட இருந்தது என்றும் பத்மராஜன் குறிப்பிட்டார்.

Also Read | "நீட் தேர்வை ஒழிக்கணும், அது வரைக்கும் ஓயமாட்டேன்".. முதல்வர் மு.க. ஸ்டாலின் லட்சியம் இது தான்.. Exclusive!!

ELECTION KING PADMARAJAN, EAST BYPOLL ELECTIONS

மற்ற செய்திகள்