'எதுக்கு எங்க அம்மா பெயரை இழுத்தீங்க'... 'விஸ்வரூபம் எடுக்கும் பிரச்சனை'... உதயநிதிக்கு தேர்தல் ஆணையம் விதித்துள்ள கெடு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தேர்தல் பரப்புரையின் போது உதயநிதி ஸ்டாலின் பேசிய விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

'எதுக்கு எங்க அம்மா பெயரை இழுத்தீங்க'... 'விஸ்வரூபம் எடுக்கும் பிரச்சனை'... உதயநிதிக்கு தேர்தல் ஆணையம் விதித்துள்ள கெடு!

தமிழகச் சட்டமன்ற தேர்தல் நேற்று நடந்து முடிந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தலைவர்கள் பலரும் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள். அந்த வகையில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலினின் மகனும், திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது முன்னாள் மத்திய அமைச்சர்களான அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா ஸ்வராஜின் மரணங்கள் பற்றி அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த மாதம் 31-ஆம் தேதி தாராபுரத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் இருவரும் பிரதமர் மோடியின் அழுத்தம் தாங்காமல் உயிரிழந்ததாகப் பேசியதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து தனது கண்டனங்களை ட்விட்டரில் அவர் பதிவிட்டிருந்தார்.

Election Commission Notice To Udhayanidhi Stalin For Remarks On Sushma

பன்சூரி ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், "உதயநிதி ஸ்டாலின் அவர்களே, உங்களுடைய அரசியல் ஆதாயத்துக்காக எனது தாயாரின் பெயரைப் பயன்படுத்தாதீர்கள். உங்களின் பேச்சு தவறானவை. பிரதமர் நரேந்திர மோடி எனது தாயாரின் மீது மிகுந்த மரியாதையையும் கவுரவத்தையும் வைத்திருந்தார். எங்களின் இருண்ட காலத்தில் பிரதமரும், கட்சியும் எங்களுக்குப் பக்கபலமாக இருந்தது. உங்களுடைய பேச்சு எங்களுக்கு வேதனை அளிக்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடி பாஜக மூத்த தலைவர்களை ஓரங்கட்டியதாகவும், சுஷ்மா ஸ்வராஜ் பிரதமர் மோடி கொடுத்த அழுத்தத்தைத் தாங்க இயலாமலேயே மறைந்தார் எனப் பேசியதாகக் கூறப்படுகிறது.

Election Commission Notice To Udhayanidhi Stalin For Remarks On Sushma

இதற்கிடையே இது தனிமனித விமர்சனம் கூடாது என்ற தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்குப் புறம்பாக இருப்பதாகத் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. எனவே தன்னுடைய பேச்சு குறித்து இன்று மாலைக்குள் விளக்கமளிக்கும்படி உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அளித்துள்ள தேர்தல் ஆணையம், அவ்வாறு செய்யத் தவறினால் அவரை கேட்காமலேயே நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளது.

மற்ற செய்திகள்