'பாலில் 'டாய்லெட்'க்கு பயன்படுத்தப்படும் தண்ணீரா?... 'எழும்பூரில் நடந்தது என்ன'?... அதிர்ச்சி வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் டீக்கடை வைத்திருக்கும் நபர் ஒருவர், ரயிலில் உள்ள டாய்லெட்டிற்கு தண்ணீர் நிரப்ப பயன்படுத்தப்படும் குழாயில் இருந்து தண்ணீரை பிடித்து பாலில் ஊற்றுவது போல வீடியோவில் காட்சிகள் பதிவாகியிருந்தது.

'பாலில் 'டாய்லெட்'க்கு பயன்படுத்தப்படும் தண்ணீரா?... 'எழும்பூரில் நடந்தது என்ன'?... அதிர்ச்சி வீடியோ!

இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மைப் பிரிவு தலைவர் அஸ்லம் பாஷா தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பிளாட் பார்ம் எண் 7-ல் இரவு 9.25 மணி அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும், ஒரு நபர் பாலில் ரயில் கழிவறை தண்ணீரை பிடித்து கலப்பதாகவும் பதிவிட்டிருந்தார். எனவே பயணிகள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதில் அளித்த சென்னை ரயில்வே மேலாளர் தனது ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார். அந்த பதிவில், இது குறித்த புகார் வந்த பொழுதே கடையை தற்காலிகமாக மூட உத்தரவிட்டதாகவும், கடைக்காரர் தண்ணீரை பாலில் ஊற்றவில்லை பாய்லரில் தான் ஊற்றியதாகவும், பாலில் அந்த தண்ணீர் கலக்க வாய்ப்பு இல்லை எனவும் பதில் அளித்துள்ளார்.

இருப்பினும் கழிவறைக்கு பயன்படுத்தபடும் தண்ணீரை எப்படி பாய்லரில் ஊற்றலாம் என நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகிறார்கள்.

RAILWAY, INDIANRAILWAYS, EGMORE RAILWAY STATION, MILK, TEA SHOP, CHAIWALA, TOILET WATER