மக்களின் அன்பு தான் இந்த பெயருக்கு காரணம்!.. 'எடப்பாடியார் நகர்' பின்னணி என்ன?.. நெகிழ்ச்சி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஈரோடு மாவட்டம் தோப்புப்பாளையத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட குடியிருப்பு பகுதிக்கு எடப்பாடியார் நகர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சாதனைகளை பறைசாற்றும் விதமாக ஈரோடு மாவட்டம் தோப்புப்பாளையத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட குடியிருப்பு பகுதிக்கு எடப்பாடியார் நகர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்நகரின் திறப்பு விழாவில் பங்கேற்ற பெருந்துறை எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் எடப்பாடியார் நகரின் பெயர் பலகையை திறந்து வைத்தார். இதனை அடுத்து பேசிய அவர், இப்பகுதி மக்களின் குடிதண்ணீர் பிரச்சனையும், விவசாயிகளின் பிரச்னைகளையும் தீர்க்கும் வகையில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை முதல்வர் செயல்படுத்தியதாகக் குறிப்பிட்டார்.
பெண்கள் மற்றும் விவசாயிகளின் முக்கிய பிரச்னையை தீர்த்து வைத்ததால், பொதுமக்களின் விருப்பத்தின் பேரில் எடப்பாடியார் நகர் உருவாக்கப்பட்டதாகவும் தோப்பு வெங்கடாசலம் தெரிவித்தார்.
மற்ற செய்திகள்