“சானிட்டைஸர பாத்து யூஸ் பண்ணுங்க!”.. விழிப்புணர்வு வைரல் வீடியோவுக்கு ட்விட்டரில் முதல்வரின் ரியாக்‌ஷன்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ட்விட்டரில் தன் பெயரை குறிப்பிட்ட பதிவிடப்பட்ட விழிப்புணர்வு வீடியோவிற்கு பதில் அளித்தும் நன்றி தெரிவித்துமுள்ளார்.

“சானிட்டைஸர பாத்து யூஸ் பண்ணுங்க!”.. விழிப்புணர்வு வைரல் வீடியோவுக்கு ட்விட்டரில் முதல்வரின் ரியாக்‌ஷன்!

தமிழக வரலாற்றில், ஒரு முதலமைச்சர் இணையதளம் வாயிலாக சாமானிய மக்களுடன் நேரடித் தொடர்பிலும், உடனடியாக அவர்களால் முதலமைச்சரை அணுக முடியும் என்கிற சூழலிலும் இருக்கிறார் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் தமிழக முதலமைச்சர். ட்விட்டரில் ஒரு விழிப்புணர்வு வீடியோவை பதிவிட்ட முகமது ரஃபிக் என்பவருக்குதான் முதல்வர் நன்றி தெரிவித்தார்.

அந்த வீடியோவில், ஒரு தந்தையும் மகளும் இருக்க, ஒரு சிறிய தட்டினை சானிடைஸர் ஊற்றி கழுவி வைக்கிறார் அந்த குட்டிப் பெண். அதன் மீது தீக்குச்சியின் நெருப்பை காய்ச்சி காட்டுகிறார் அந்த தந்தை. ஆனால் எதுவுமே ஆகவில்லை என்பதுபோல் தெரிகிறது. ஆனால் அதன் பின்னர் ஒரு பேப்பரை அந்த தட்டின் மீது எடுத்துச் சென்று காட்டுகிறார். அப்போது பேப்பர் குபுகுபுவென தீப்பற்றி எரிகிறது. “அவ்வளவு நேரம் அதில் நெருப்பு இருக்கிறது. மக்கள் விழிப்புணர்வுடன் இருங்கள். வணக்கம்” என்று அந்த தந்தை கூறுகிறார்.

முன்னதாக, “மதிப்பிற்குரிய முதலமைச்சர் அவர்கள் கவனத்துக்கு, சானிடைஸர் யூஸ் பண்ணூம்போது பார்த்து யூஸ் பண்ணுமாறு அன்போடு கேட்டுக் கொள்வதாக அரசாங்கத்தின் சார்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள், நன்றி வணக்கம்” என்று குறிப்பிட்டு அந்த வீடியோவை பதிவிட்ட முகமது ரஃபிக் அதில் முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை டேக் செய்திருந்தார். இதை ரி-ட்வீட் செய்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “இந்த நேரத்தில் தேவையான நல்லதொரு விழிப்புணர்வு ஏற்படுத்திய தங்களுக்கு

எனது நன்றியும் வாழ்த்துக்களும்” என்று தெரிவித்ததோடு, “மக்களின் பாதுகாப்பினை மேலும் உறுதி செய்ய இந்த விழிப்புணர்வு உதவியாக இருக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.