கிட்ட நெருங்க முடியாத அளவுக்கு வாக்கு வித்தியாசம்...! 'வேற லெவல்' லீடிங்-ல் அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி  அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கும் வேட்பாளராக உள்ளார்.

கிட்ட நெருங்க முடியாத அளவுக்கு வாக்கு வித்தியாசம்...! 'வேற லெவல்' லீடிங்-ல் அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி...!

தமிழகத்தில் கடந்த இரு சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று ஆட்சி அமைத்து வந்தது. இடையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவுக்குப் பின், ஓபிஎஸ் முதல்வராக நியமிக்கப்பட பின்னர் அவர் விலகி சசிகலா தேர்வு செய்த எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி ஏற்றார்.

ஆட்சி காலம் முடிவு வந்த நிலையில் ஒரு சில இடர்ப்பாடுகளைக் கடந்து முதல்வர் வேட்பாளராகக் கடந்து மீண்டும் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

2021ஆம் ஆண்டு சட்டமன்ற தொகுதி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அதற்கு முன் கொரோனா காலத்திலும் பிரச்சாரங்கள் அதிரடியாக நடைபெற்றது.

அதோடு தேர்தல் பிரச்சாரக் களத்தில் எடப்பாடி- ஸ்டாலினுக்கு மட்டுமே போட்டி எனும் அளவுக்கு பிரச்சாரத்தில் வலுவாகத் தன்னை எடப்பாடி நிரூபிக்க வேண்டி இருந்தது. சில வேட்பாளர்கள் அவரவர் சொந்தத் தொகுதியில் முடங்க, எடப்பாடி பழனிசாமி சொந்தத் தொகுதியான எடப்பாடி போகாமல் அனைத்துத் தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்தார்.

இந்நிலையில் தற்போது, ஒன்மேன் ஆர்மியாக அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்த முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி, 27,000 வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் உள்ளார்.

இந்த எண்ணிக்கை தமிழக வேட்பாளர்களில் இவரே அதிக வாக்குகள் எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்