'கொரோனா சிகிச்சை'... தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய உத்தரவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.

'கொரோனா சிகிச்சை'... தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய உத்தரவு!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணப்படுத்த பிளாஸ்மா தெரபி சிகிச்சையைப் பரிந்துரைத்துள்ள நிலையில், அதுகுறித்த முக்கிய முடிவைத் தமிழக அரசு எடுத்துள்ளது. டெல்லி, கேரளா, குஜராத், பஞ்சாப் போன்ற பல மாநிலங்கள் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ள நிலையில், இதன்மூலம் பல நோயாளிகளின் உடல்நிலை தேறி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சை அளிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சோதனை முறையில் பிளாஸ்மா தெரபி மூலம் 18 பேர் குணமடைந்ததால் ரூ.2 கோடியில் பிளாஸ்மா வங்கி நிறுவத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனிடையே நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை விரைவில் தொடங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பிளாஸ்மா என்பது ரத்தத்தில் உள்ள ஒரு திரவம். ரத்தத்தில் 45 சதவீதம் சிவப்பு மற்றும் வெள்ளை தட்டையணுக்கள் உள்ளன. எஞ்சிய 55 சதவீதம்தான் பிளாஸ்மா.

ஒரு வைரஸ் மனித உடலில் வந்தால் அதை எதிர்த்துப் போராடும் ஆன்டிபாடிகள் (நோய் எதிர்ப்புத் திறன்) பிளாஸ்மாவில்தான் தோன்றுகின்றன. இதன் காரணமாகத்தான் பிளாஸ்மா மூலம் நோயாளிகளைக் குணப்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.'கொரோனா சிகிச்சை'... தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய உத்தரவு!

மற்ற செய்திகள்