மாவட்டம் விட்டு 'மாவட்டம்' செல்ல... ஜூன் 30 வர வாய்ப்பில்ல... எல்லைகள் எல்லாம் 'closed'... தமிழக முதல்வர் உத்தரவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், அடுத்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக, சென்னையில் மட்டும் அதிகளவில் பாதிப்பு இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தன. மேலும், கடந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட ஊரடங்கு பல்வேறு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு பாதிப்பு குறைவான பகுதிகளில் பல தளர்வுகளும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆலோசனை கூட்டம் முடிந்து பின் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'நாளை முதல் வரும் 30 ஆம் தேதி வரை மண்டலத்திற்குள் இருக்கும் மாவட்டங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது. அதே போல, அனைத்து மாவட்டங்களின் எல்லையும் 30 ஆம் தேதி வரை மூடப்படுகிறது. இந்த நாட்களில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனைத்து விதமான போக்குவரத்தும் தடை செய்யப்படுகிறது. வேறு மாவட்டம் செல்ல வேண்டும் என்றால் இ பாஸ் வாங்கி உரிய அனுமதியுடன் செல்ல வேண்டும்' என தெரிவித்தார்.
மற்ற செய்திகள்