'உலக பிரசித்திப்பெற்ற காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில்...' - 'வழிபாடு' நடத்திய தமிழக 'முதல்வரின்' மனைவி துர்கா ஸ்டாலின்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நேற்றைய தினம் (13-07-2021) வழிபாடு நடத்தியுள்ளார்.
உலக பிரசித்திப்பெற்ற காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரி உற்சவத்தில் கலந்துக்கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் நேற்று காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார்.
பொதுவாக காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் முக்கிய வாசலாக உள்ள கிழக்கு கோபுர வாசல் வழியாக தான் முக்கிய பிரமுகர்கள் முதல் பொது மக்கள் வரை கோயிலுக்குள் செல்வர். ஆனால், துர்கா ஸ்டாலின் மேற்கு கோபுர வாசல் வழியாக உள்ளே சென்றார். பிறகு, பேட்டரி கார் மூலமாக காமாட்சி அம்மன் மூலஸ்தானம் அமைந்துள்ள பகுதிக்கு வந்துள்ளார்.
பின்பு, அங்கு நடைபெற்ற ஆஷாட நவராத்திரியை ஒட்டிய சிறப்பு அலங்காரத்தில் வீணையுடன் காட்சி அளித்த காமாட்சி அம்மனையும், வராகி அம்மனையும் தரிசித்த பின்னர், சிறப்பு பூஜைகளிலும் துர்கா ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். மேலும் கோயில் நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட பிரசாதங்களை பெற்றுக் கொண்டார்.
அதோடு மட்டுமல்லாமல், கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பெண்களுடன் சற்று நேரம் உரையாடிவிட்டு கிளம்பினார்.
மற்ற செய்திகள்