'காலையில் இருந்தே தொடர்ந்து இழுபறி...' 'ஒருவழியா முடிவுக்கு வந்த காட்பாடி தொகுதி நிலவரம்...' - கடைசியில் அதிரடி ட்விஸ்ட்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காலையில் இருந்து நீண்ட இழுபறிக்குப் பிறகு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெற்றி பெற்றுள்ளார்.
2021ஆம் ஆண்டு சட்டபேரவை தேர்தலின் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் திமுக 10 வருடங்களுக்கு பின் பெரும்பான்மையில் ஆட்சியமைக்க உள்ளது.
திமுக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வி.ராமுவும் களத்தில் இருந்தார்.
காலையில் இருந்து முன்னுக்கு பின் திமுகவும் அதிமுகவும் மாறி மாறி வந்த நிலையில் தற்போது வெற்றி வேட்பாளர் என அறிவிக்கபட்டுள்ளது.
காட்பாடி தொகுதியில் நீண்ட இழுபறிக்கு பின் முடிவில் துரைமுருகன் 52,526 வாக்குகளையும், அதிமுக வேட்பாளரான ராமு 51,087 வாக்குகள் பெற்றிருந்தார். இருவரும் இடையே வெறும் 794 வாக்குகளே வித்தியாசம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்