'திறப்பு விழா முடிந்ததும் மூடு விழா'... 'யூடியூப்வில் வந்த ரிவ்யூ, அதிரடி ஆஃபர்'... சென்னையின் பிரபல பிரியாணி கடைக்கு வந்த சோதனை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் திறப்பு விழா அன்றே பிரபல பிரியாணி கடைக்குச் சீல் வைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேளச்சேரியில் தி வெட்டிங் பிரியாணி என்ற பெயரில் பிரியாணி கடை நேற்று புதிதாகத் திறக்கப்பட்டது. இந்த கடை திறப்புவிழா குறித்து ஏற்கனவே யூடியூப்வில் ரிவ்யூவும் கொடுக்கப்பட்டிருந்தது. அதோடு திறப்பு விழா சலுகையாக விலையில் 50 சதவீதம் தள்ளுபடி அறிவித்திருந்தனர். இதனை அறிந்த பொது மக்கள் காலை முதலே கடையின் முன்பு கூட ஆரம்பித்தனர். இதனால் கூட்டம் நிரம்பி வழிந்தது.
அங்குக் கூடியிருந்த மக்களிடையே சமூக இடைவெளி என்பது காணப்படவில்லை. இதனை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் வந்து கடையை மூடும்படி அறிவுறுத்தினர். இதற்கிடையே மாநகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள், தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட்டம் கூடவில்லையா? அப்போது யார் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தார்கள். அப்போதெல்லாம் கொரோனா பரவவில்லையா இப்போது மட்டும் பரவுமா என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் கடைக்கு அரை மணி நேரம் அனுமதி வழங்கினர். அதற்குள் பில் வாங்கிய நபர்களுக்குப் பிரியாணி கொடுத்துவிடும் படி கூறினர். பின்னர் கடைக்குச் சீல் வைத்தனர்.
மற்ற செய்திகள்