"சொத்து மொத்தமும் எழுதித் தர்றியா? இல்லையா?".. 'தாயுடன் தொடர் தகராறு'.. 'மது குடித்ததும் தலைக்கேறிய போதை!'.. 'மகன்' செய்த 'நடுங்கவைக்கும்' சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தாயின் பெயரில் இருக்கும் வீட்டை தன் பெயருக்கு எழுதிக் கொடுக்குமாறு தொடர்ந்து வலியுறுத்திய மகன் தாயை கொலை செய்துள்ள சம்பவம் நெல்லை அதிர வைத்துள்ளது.
நெல்லை மாவட்டம் செட்டிகுளம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் ஜெயமணி. 62 வயதான மூதாட்டி ஜெயமணிக்கு ஒரு மகனும் நான்கு மகள்களும் உள்ள நிலையில் மூன்று மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இதனால் செட்டிகுளம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் தனது கடைசி மகளுடன் ஜெயமணி வசித்து வந்திருந்தார். டெய்லர் வேலை செய்து வந்த ஜெயமணியின் மகன் ராஜனுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள நிலையில் அவர் செட்டிகுளம் அருகே உள்ள ஐயப்பன் நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் தங்களது பூர்வீக வீட்டை தன் பெயருக்கு எழுதித் தருமாறு தனது தாயாரை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் ஜெயம் ரவியோ தனது மகள்களுக்கும் சேர்த்து சொத்தை பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்துள்ளார். இதுதொடர்பாக மகன் ராஜனுக்கும், ஜெயமணிக்கும் தொடர் தகராறு இருந்து வந்த நிலையில் 40 நாட்களுக்குப் பின்னர் டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டது.
அங்கு சென்று மது வாங்கி குடித்த ராஜனுக்கு போதை தலைக்கேறியதும் தனது தாய் ஜெயமணியை சந்தித்து, வீட்டை தன் பெயருக்கு எழுதிக் கொடுக்குமாறு வாக்குவாதம் செய்துள்ளார். அதற்கு அந்த தாய் மறுக்கவே ஆத்திரமடைந்த ராஜன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தாயையே சொத்துக்காக வெட்டியிருக்கிறார். இதனால் சம்பவ இடத்திலேயே ஜெயமணி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். தனது தாயை வெட்டிக்கொன்றதை பார்த்து ராஜனின் சகோதரி அலறித் துடித்திருக்கிறார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்து வந்த மக்கள் பார்த்தபோது ஜெயமணி உயிரிழந்தது தெரிய வந்தது. உடனடியாக கூடங்குளம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூடங்குளம் போலீசார் ஜெயமணியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு பெற்ற தாயையே குடிபோதையில் கொலை செய்த மகன் ராஜனை கைது செய்தனர்.