‘போதைக்காரர்களுக்கு இடையே நடந்த பரபரப்பு மோதல்!’.. ‘சண்டையின் உச்சத்தில் நடந்த அதிபயங்கரம்!’
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவையில் மது போதையில் சண்டையிட்டுக் கொண்டுள்ள ஒருவரின் விரலை மற்றொருவர் கடித்து துப்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோவை புலியகுளம் பகுதியில் இரண்டு தினங்களுக்கு முன்னர்தான் இந்த பயங்கர சம்பவம் நிகழந்துள்ளது. மது போதையில் இருந்துள்ள இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளத் தொடங்கினர். சாலையில் சண்டையிட்டுக் கொண்ட இவர்களை முதலில் யாருமே கண்டுகொள்ளாததாகத் தெரிகிறது.
ஆனால் இருவரும் கைகளில் கற்களை வைத்துக் கொண்டு ஒருவரையொருவர் மண்டையில் தாக்கியும், கட்டி உருண்டும் சண்டையிட்டுக் கொண்டிருந்துள்ளனர். அப்படியே உருண்டவாறே ஒரு கடையினுள் நுழைந்து சண்டையிட்டனர். இதனால் அங்கிருந்த கடைக்காரர்கள் இருவரையும் விலக்கிவிட முயற்சித்தனர். ஆனால் அப்போது ஒருவர் இன்னொருவரின் விரலைக் கடித்து துப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் வீடியோவாக இணையத்தில் வலம் வருகிறது.