‘பணம் கொடுக்கலேன்னா தலைகீழா குதிச்சுடுவேன்’.. மின்கம்பத்தில் ஏறி மிரட்டல் விடுத்த ‘குடிமகன்’.. பரபரப்பு சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குடிக்க பணம் தர மறுத்ததால் வாலிபர் ஒருவர் மின்கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்காலை அடுத்த திருப்பட்டினம் மகத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் டேவிட் (40). மதுப்பழக்கத்துக்கு அடிமையான இவர், குடிக்க பணம் இல்லாவிட்டால் சாலையில் செல்பவர்களை மிரட்டி பணம் கேட்பதை வழக்கமாக கொண்டவர் எனக் கூறப்படுகிறது. யாரும் பணம் தராவிட்டால் தென்னை மரம், பனை மரம், மின் கம்பம், கோயில் காம்பவுண்டு சுவர் என ஏதாவது ஒன்றில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுவதும், அவர் மீது பரிதாபப்பட்டு சிலர் பணம் தருவதும் வாடிக்கையாக இருந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இதேபோல் மகத்தோப்பு மதுக்கடைக்கு அருகில் உள்ள மின்கம்பத்தில் ஏறி குடிக்க பணம் தரவில்லை என்றால் தற்கொலை செய்துவிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். அப்போது மின் வயரை பிடிக்க முயன்றுள்ளார். உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரை கீழே இறக்க முயற்சி செய்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கைநழுவி அவர் கீழே விழுந்தார். உடனே அவரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து தெரிவித்த போலீசார்,‘தற்போது குணமடைந்த திருப்பிய அவர், போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு டார்சர் செய்கிறார். குடிக்க பணம் கெடக்கலைன்னு சாகப்போன என்னை ஏன் காப்பாத்துனீங்க? அப்போ நீங்க பணம் கொடுங்க. இல்லேன்னா போலீஸ் ஸ்டேஷன் மீது ஏறி தலைகீழா குதித்து செத்துடுவேன்னு மிரட்டுகிறார். அவரை என்ன பண்றதுன்னே தெரியல’ என தெரிவித்துள்ளனர்.
News Credits: Vikatan
TRENDING NEWS
மற்ற செய்திகள்
LATEST VIDEOS