'எனக்கு சரக்கு வேணும்'...'அரை நிர்வாண கோலத்தில்'...'ரத்தம் சொட்ட சொட்ட இளைஞர் செய்த செயல்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுபானம் வாங்கித் தருமாறு ரத்த காயங்களுடன் நடு ரோட்டில் இளைஞர் செய்த அட்டகாசம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'எனக்கு சரக்கு வேணும்'...'அரை நிர்வாண கோலத்தில்'...'ரத்தம் சொட்ட சொட்ட இளைஞர் செய்த செயல்'!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் உள்ள மதுபான கடையில் இளைஞர் ஒருவர் மது போதையில் ரகளையில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்த இளைஞரை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த இளைஞர் போதை தலைக்கேறிய நிலையில் உடைந்த பாட்டிலால் தன்னை தாக்கி கொண்டு அரை நிர்வாண கோலத்தில் சாலையில் நின்று கொண்டிருந்தார்.

அந்த இளைஞர் சாலையில் செல்வோரிடம் எனக்கு மது வாங்கி கொடுங்கள் என கெஞ்சி கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் சாலையில் செல்வோர் மற்றும் பொதுமக்களை மிரட்ட ஆரம்பித்தார். இதனை கண்ட பொதுமக்கள் அச்சமடைந்தார்கள். மேலும் அந்த நபரின் கையில் உடைந்த பாட்டில் இருந்ததால் அவரை லாவகமாக பிடிக்க காவல்துறையினர் முயற்சி செய்தார்கள். இதையடுத்து அந்த நபரிடம் பேச்சு கொடுத்த காவல்துறையினர் மதுபானம் வாங்கி தருவதாக கூறினார்கள்.

இந்த சூழ்நிலையில் அந்த நபர் சற்று அமைதியாக, அவருக்கு மதுபானம் வாங்கி கொடுத்து அவரை சமாதானம் செய்தார்கள். இதையடுத்து மது குடித்த பின்னர் சமாதானமான அந்த இளைஞர், ஆம்புலன்சில் ஏறினார். போலீசார் நடத்திய விசாரணையில், அவர் மேற்கு பல்லடத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனிடையே பல்லடம் அரசு மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், போதை தெளிந்த நிலையில் காவல்துறையினர் தன்னை கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் அங்கிருந்து அவர் தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

ATTACKED, PUBLIC NUISANCE, TIRUPUR