வழி தவறி வந்துட்டோம்னு லாரியை திருப்பி இருக்காங்க.. ஆனா இப்படி நடக்கும்னு கொஞ்சம் கூட நெனச்சிருக்க மாட்டாங்க.. சென்னையில் நடந்த பதைபதைப்பு சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் உயர் மின்னழுத்த கம்பி உரசியதால் கண்டெய்னர் லாரி தீப்பிடித்து டிரைவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வழி தவறி வந்துட்டோம்னு லாரியை திருப்பி இருக்காங்க.. ஆனா இப்படி நடக்கும்னு கொஞ்சம் கூட நெனச்சிருக்க மாட்டாங்க.. சென்னையில் நடந்த பதைபதைப்பு சம்பவம்..!

குஜராத்தில் இருந்து சென்னை செங்குன்றத்தில் கர்நாடக பதிவு எண் கொண்ட கண்டெய்னர் லாரி ஒன்று வந்துள்ளது. இந்த லாரியை மணிகண்டன், செல்வம் என்ற இரண்டு பேர் மாறி மாறி ஓடி வந்துள்ளனர். புறவழிசாலையில் வந்து கொண்டிருந்தவர்கள் வழிதெரியாமல் பூந்தமல்லி நகருக்குள் நுழைந்ததாக சொல்லப்படுகிறது.

இதனை அடுத்து மீண்டும் செங்குன்றம் நோக்கி செல்வதற்காக லாரியை திரும்பியுள்ளனர். அப்போது கல்லறை பேருந்து நிறுத்தம் அருகே லாரி சென்றபோது உயர் மின்னழுத்த கம்பி லாரியின் மேல் உரசி உள்ளது. அதனால் லாரி முழுவதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனை அறியாத மணிகண்டன் லாரியின் கதவை திறந்து இறங்க முயன்றுள்ளார்.

அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து தீ பிடித்துள்ளது. உடனே கூச்சலிட்டுக் கொண்டு கீழே விழுந்துள்ளார். ஆனாலும் உடல் முழுவதும் தீ பற்றி சம்பவ இடத்திலேயே மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதில் டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்த செல்வம் லாரியின் உலோக பகுதிகளை தொடாமல் இருந்தார். அதனால் மின்சார தாக்குதலில் இருந்து அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CHENNAI, LORRY

மற்ற செய்திகள்