“கேரளா வரைக்கும் வந்த.. கொரோனா வைரஸ் நமக்கு வராம இருக்க, இதையெல்லாம் பண்ணுங்க” - முன்னெச்சரிக்கை வழிமுறைகள் சொல்லும் Dr Sabarinath.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சீனாவின் வுஹானில் உருவாகி, ஆசியா உட்பட உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், சீனாவில் இருந்து கேரளாவுக்கு வந்த மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர் கண்காணிக்கப்பட்டு வருகிறார். 

“கேரளா வரைக்கும் வந்த.. கொரோனா வைரஸ் நமக்கு வராம இருக்க, இதையெல்லாம் பண்ணுங்க” - முன்னெச்சரிக்கை வழிமுறைகள் சொல்லும் Dr Sabarinath.. வீடியோ!

இந்த நிலையில் நாம், நம்மிடையே இந்த வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி என்று விளக்குகிறார் மருத்துவர் சபரிநாத்.

அதன்படி,  கொரோனா போன்ற வைரஸ் உள்நுழைந்தால், அவற்றுடன் பாக்டீரியாக்களும் சேர்ந்துகொள்வதால் நாம் சுத்தத்தை எடுத்துக் கொள்வது அவசியமாகிறது. இவற்றையும் மீறி, மூச்சு வாங்கும் அளவுக்கு சிரமம் ஏற்பட்டால் மட்டும் மருத்துவமனையை அணுகலாம்.  ஆனால் உடலில் சர்க்கரை உள்ளிட்ட ஏதேனும் ஒரு நோய்த்தொற்று உள்ளவர்கள் வெளியிடங்களுக்கோ, மருத்துவமனைகளுக்கோ தேவையில்லாமல் செல்வதைத் தவிர்க்கலாம். 

இதற்காக மருத்துவர் சபரிநாத் சொல்லும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

1, உடலில் நுழையும் இந்த கொரோனா வைரஸ், பன்மடங்காக பெருகி உடலில் இருக்கும் நீர்ச்சத்தினை குறைக்கிறது. ஆகையால் சாதாரணமாக குடிக்கும் நீரை விட, தற்போதைய சூழலில் தண்ணீர் குடிப்பதை அதிகரிக்கச் செய்வதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிரிக்க வேண்டும்.

2, முதலில் N-95 என்கிற மாஸ்க்கை(முகமூடி) அணிந்துகொள்ள வேண்டும். வெள்ளை கலரில் இருக்கும் இந்த மாஸ்க்கைத்தான் பன்றிக்காய்ச்சலின்போது பயன்படுத்துகிறார்கள். 3 நாட்களுக்கு ஒருமுறை இந்த மாஸ்க்கை மாற்றவும் வேண்டும். குறிப்பாக மருத்துவர்களும், குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிகள், நோய்த்தொற்று உள்ளவர்கள் இந்த மாஸ்க்கை அணியலாம்.

3, பொவிடோன் அயோடின் 5 மிலியும், கல் உப்பை சிறிதளவும் சுடு தண்ணியில் போட்டு கொதிக்க வைத்து, வெதுவெதுப்பான தண்ணீரை தொண்டை வரை குடித்து கொப்பளித்து துப்ப வேண்டும்.

4, வாய் சுத்தம் அவசியம். வாய்சுத்தம் செய்வதற்கான திரவங்களை மெடிக்கலில் வாங்கி கொப்பளிப்பதற்கு பயன்படுத்தலாம்.

CORONAVIRUSEC, DOCTOR