‘இது கடினமான சூழ்நிலை தான்’... ‘ஆனாலும், இது மிகவும் முக்கியம்’... ‘அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் பதிவு’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கு காலத்தில் ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து எளிதாக எப்படி விடுபடலாம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த 21 நாள் ஊரடங்கு உத்தரவு வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஏப்ரல் மாதம் இறுதிவரை ஊரடங்கை நீட்டிக்க சில மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளதாக நாடாளுமன்றக் குழுத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்நிலையில்,‘இது நாம் கடக்க வேண்டிய கடினமான சூழ்நிலை. நாம் வலுவாக இருக்கவும், இந்த இக்கட்டான சூழ்நிலையை கடந்து செல்வதற்கும், மன ஆரோக்கியம் மிகவும் முக்கியம். சிறிய பேச்சுக்கள், அன்புக்குரியவர்களுடன் கவலைகளைப் பகிர்ந்து கொள்வது போன்றவற்றால், மன அழுத்தத்திலிருந்து நாம் விடுப்படலாம். உங்களை கவனித்துக் கொள்ளுங்கள்!’ என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
#COVID19Pandemic: This is a tough situation we ought to overcome. Mental Health is very important to stay strong & keep going. Small talks , sharing concerns with loved ones can relieve the stress. Take Care! #TN_Together_AgainstCorona #StayHome #Vijayabaskar @MoHFW_INDIA pic.twitter.com/UO3ePGDpJf
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) April 8, 2020