'இருதய பாதிப்பு இருப்பவர்களுக்கு கொரோனா வந்தால்'?...'ஒர்கவுட் பண்ணும்போது மாஸ்க் போடலாமா'?... எச்சரித்துள்ள மருத்துவர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உடற்பயிற்சி செய்யும் போது முககவசம் அணிவது குறித்தும், இருதய பாதிப்பு உள்ளவர்கள் குறித்தும் மருத்துவர் விளக்கமளித்துள்ளார்.
கொரோனா கால கட்டம் என்பதால் பலர் மருத்துவமனையை நாடி வராமல் உயிர் இழந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு இருதய பாதிப்பு இருந்தால் அவர்கள் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இருதய அறிவியல் துறை நிபுணர் மாதவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், தற்போதைய நிலையில் இருதயம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் உடனே அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று மருத்துவர்களின் ஆலோசனை பெற வேண்டும்.
கடந்த 6 மாதங்களாக இருதய நோயாளிகளை ஆய்வு செய்தபோது, சரியான நேரத்தில் மருத்துவமனையை அணுகாததால் பெரும் ஆபத்தையோ அல்லது உயிர் போகும் நிலையையோ அடைந்துள்ளனர். .டி.ஸ்கேன் எடுக்கும் போதே உங்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா அல்லது நோய் வந்து விட்டுச் சென்று விட்டதா என்பதை அறியமுடியும். அதன் மூலம் உங்களுக்கு எவ்விதமான சிகிச்சை அளிக்கலாம் என்று மருத்துவர்கள் முடிவு செய்து கொள்ள முடியும். எனவே கொரோனா காலகட்டத்தில் நீங்கள் பயந்து கொண்டு வீட்டிலேயே இருக்க வேண்டாம்.
அதேபோன்று முககவசம் அணிவதன் மூலம் நோய்த் தொற்றிலிருந்து காத்துக் கொள்ள முடியும் எனக் கூறிய மருத்துவர், ஆனால் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்யும் போது சமூக இடைவெளியைக் கடைப் பிடித்து முககவசம் அணிவதைத் தவிர்த்து பயிற்சி செய்வது நல்லது எனக் கூறியுள்ளார். ஏனென்றால் உடற்பயிற்சி செய்யும்போது இருதயத்திற்குத் தேவையான சுவாசம் கிடைக்க வேண்டும். எனவே மாஸ்க் போடாமல் உடற்பயிற்சி செய்வதே நல்லது'' என விளக்கமளித்துள்ளார்.
மற்ற செய்திகள்