‘எஜமானரை அடிக்க வந்தவர்களை விரட்டியடித்த நாய்’.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் எஜமானரை கொலை செய்ய வந்த நபர்களை நாய் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘எஜமானரை அடிக்க வந்தவர்களை விரட்டியடித்த நாய்’.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..!

சென்னை போரூர் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் ஆலம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ரவியை தேடி அவரது வீட்டிற்கு மூவர் வந்துள்ளனர். அப்போது வீட்டியில் இருந்த ரவியின் பாட்டி அவர் இல்லை என தெரிவித்துள்ளார். ஆனால் அந்த நபர்கள் வீட்டினுள் செல்ல முயற்சி செய்துள்ளனர்.

அப்போது ரவியின் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் அவர்களை குரைத்து வீட்டிற்குள் செல்ல விடாமல் தடுத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் நாயின் வாலை கத்தியால் வெட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணை திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரவி அந்த நபர்களுடன் இணைந்து செல்போன் திருட்டு சம்பவங்களில் ஈடுப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் திருடிய செல்போன்களை பிரிப்பதில் அவர்களிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ரவியை கொலை செய்ய திட்டமிட்டது தெரிவந்துள்ளது. இது தொடர்பாக முத்து என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

POLICE, CHENNAI, DOG, ROWDY