'நீண்ட நேரமாகக் குரைத்த நாய்'... 'ஒண்ணும் புரியாமல் நின்ற மக்கள்'... 'விரைந்த தீயணைப்பு வீரர்கள்'... தெப்பக்குளத்தில் நிலவிய பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரை தெப்பக்குளத்தில் நின்று நீண்ட நேரமாகக் குரைத்துக்கொண்டே இருந்த நாயால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

'நீண்ட நேரமாகக் குரைத்த நாய்'... 'ஒண்ணும் புரியாமல் நின்ற மக்கள்'... 'விரைந்த தீயணைப்பு வீரர்கள்'... தெப்பக்குளத்தில் நிலவிய பரபரப்பு!

மதுரை தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தின் ஒரு பகுதியை நோக்கி நாய் ஒன்று நீண்ட நேரமாகக் குரைத்துக் கொண்டே இருந்துள்ளது. இதைக் கவனித்த அந்த பகுதி மக்கள், ஒன்றும் புரியாமல், தெப்பக்குள பகுதிக்குச் சென்று வழக்கத்துக்கு மாறாக ஏதாவது இருக்கிறதா எனப் பார்த்துள்ளார்கள். ஆனால் அவர்கள் சந்தேகப்படும்படி எதுவும் இல்லாத நிலையில், தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்கள்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், ரப்பர் படகு உதவியுடன் தெப்பக்குளத்திற்குள் இறங்கி சோதனை செய்தனர். ஒரு வேளை நாயின் குட்டி ஏதாவது இறந்து உள்ளே கிடைக்கிறதா அல்லது அசம்பாவித சம்பவம் எதுவும் நடந்ததா என்று பல கோணத்தில் தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்திற்கு மேலாகச் சோதனை செய்தனர். ஆனால் அவர்கள் சந்தேகப்பட்டது போன்று ஏதும் இல்லாத நிலையில், தீயணைப்பு வீரர்கள் திரும்பிச் சென்றார்கள்.

சிறிது நேரத்தில் குரைத்துக் கொண்டிருந்த நாயும், குரைப்பதை நிறுத்தி விட்டுத் திரும்பிச் சென்றது. ஆனால் நாய் ஏன் தொடர்ந்து குரைத்தது என்பது தான் அந்த பகுதி மக்களுக்குப் புரியாத புதிராக இருந்தது. இருப்பினும் சிறு புகாரையும் அலட்சியம் செய்யாமல் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்ட தீயணைத்துறையினருக்கு அப்பகுதி மக்கள், பாராட்டுகளைத் தெரிவித்தார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மற்ற செய்திகள்