தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா...? 'வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்...' - மருத்துவர்கள் குழுவுடன் முதல்வர் சந்திப்பு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா...? 'வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்...' - மருத்துவர்கள் குழுவுடன் முதல்வர் சந்திப்பு...!

வரும் 24-ஆம் தேதியோடு தற்போதைய ஊரடங்கு காலம்  முடியவுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் பரவலின் தீவிரத்தன்மை குறைந்துள்ளதாக இல்லை.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக்கட்சி குழு கூட்டம் தொடங்கியது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக்கட்சி குழு கூட்டம் தொடங்கியது. மருத்துவ நிபுணர் குழு அளித்த பரிந்துரைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் எம்எல்ஏக்கள் மத்தியில் பேசினார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை; தளர்வுகளை பயன்படுத்தி அவசியமில்லாமல் வெளியில் சுற்றுவது அதிகரித்துள்ளது.

முழு ஊரடங்கை விடுமுறைகாலம் என்று பொதுமக்கள் நினைக்கின்றனர்; இது கொரோனா காலம் என்பதை மக்கள் இன்னும் முழுமையாக உணரவில்லை. தளர்வுகள் அற்ற ஊரடங்கை அமல்படுத்தினால் தான் கொரோனா கட்டுக்குள் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு பரிசீலனை செய்து வருகிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், முழு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மதியம் ஒரு மணிக்குள் முடிவெடுக்க வேண்டிய நிலையில் அரசு உள்ளது. மேலும் இரண்டு வாரங்கள் ஊரடங்கை நீடிக்குமாறு மருத்துவர்கள் குழு பரிந்துரைத்துள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன

மற்ற செய்திகள்