‘கொரோனாவ ஸ்டாப் பண்ண, இந்த 5-ஐயும் பண்ணுங்க’.. வைரல் ஆகும் கூகுளின் எளிய வழிமுறைகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உலகம் முழுவதும் கோரோனா எனும் கொடும் நோயை எதிர்கொள்வதற்கான தடுப்புமுறைகளை உலகநாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில் Do The Five எனும் சிறப்பு வழிமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்கச் சொல்லி கூகுள் வலியுறுத்தி ட்வீட் பதிவிட்டுள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை கொரோனா வைரஸால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 110-ஐ தாண்டியுள்ளது. இன்னொருபுறம் கொரோனாவுக்கு நிகராக கொரோனா பாதிப்பு குறித்த வதந்திகளும் பரவி வரும் சூழ்நிலையில் வதந்திகளை பரப்புபவர்கள் மீதான நடவடிக்கைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில்தான் பெரும் நிறுவனங்களும், சுகாதார நிறுவனங்களும் கொரோனா வைரஸ் தொற்றினை தடுப்பதற்கான
Do these five simple things to help stop coronavirus (COVID-19).
DO THE FIVE
1️⃣ HANDS: Wash them often
2️⃣ ELBOW: Cough into it
3️⃣ FACE: Don’t touch it
4️⃣ FEET: Stay more than 3ft (1m) apart
5️⃣ FEEL: Sick? Stay home
*General public health information* pic.twitter.com/7SNGV1ROxZ
— Google (@Google) March 14, 2020
வழிமுறைகளை வலியுறுத்துகின்றன. அவ்வகையில், கூகுள் நிறுவனம் கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருத்தல், தோளும் கையும் இணையும் பகுதியில் முகத்தை வைத்துக்கொண்டு இருமச் செய்தல், முகத்தைத் தொடாதிருத்தல், பிறரிடம் இருந்து 3 அடிகள் தள்ளியித்தல் & உடல்நிலை சரியில்லையெனில் வீட்டிலேயே ஓய்வெடுத்தல் உள்ளிட்டவற்றை வலியிறுத்தி ட்வீட் பதிவிட்டுள்ளது.