சட்டமன்ற தேர்தலில் விட்டதை.. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தட்டித் தூக்கிய திமுக.. தொண்டர்கள் உற்சாகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அதிமுகவின் எஃகு கோட்டையாக கருதப்பட்ட கோவை மாநகராட்சியில் திமுக மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

சட்டமன்ற தேர்தலில் விட்டதை.. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தட்டித் தூக்கிய திமுக.. தொண்டர்கள் உற்சாகம்..!

தமிழ்நாட்டில் கடந்த 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்தது. இந்த நிலையில் இன்று (22.02.2022) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. காலை 8 மணி முதல் வாக்கு எண்ணும் பணி தொடங்கப்பட்டது. பெரும்பாலான இடங்களில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளுமே கைப்பற்றி வந்தன. எதிர்க்கட்சிகள் வலுவாக உள்ள இடங்களாகக் கருதப்பட்ட பகுதிகளிலும் கூட திமுக மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 138 நகராட்சிகளில் 120-க்கும் அதிகமான நகராட்சிகளில் திமுக கைப்பற்றியுள்ளது. பேரூராட்சிகளில் 490-ல் 360க்கும் அதிகமான பேரூராட்சிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதேபோல 21 மாநகராட்சிகளையும் திமுக கட்சியே கைப்பற்றியுள்ளது.

இதில் கொங்கு மண்டலத்தின் இதயமாகக் கருதப்படும் கோவை மாநகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது பெரும் சாதனையாகவே பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம் கோவை மாவட்டம், அதிமுகவின் எஃகு கோட்டையாகக் கருதப்படுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவையில் உள்ள 10 தொகுதிகளையும் அதிமுக கூட்டணியே கைப்பற்றியது. அப்படி உள்ளே நுழைய முடியாமல் இருந்த கோவையில் இந்த முறை திமுக கைப்பற்றி அசத்தியுள்ளது.

DMK won Coimbatore corporation in Urban Local body elections

மொத்தம் 100 வார்டுகளை கொண்ட கோவையில் இதுவரை 62 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக அதில் திமுக மட்டும் 51 வார்டுகளில் வென்றுள்ளது. திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் 5 வார்டுகளிலும், சிபிஎம் 3 வார்டுகளிலும் மதிமுக 2 வார்டுகளிலும், சிபிஐ ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது. அதில் மேட்டுப்பாளையம், காரமடை, பொள்ளாச்சி, வால்பாறை, கருமத்தம்பட்டி, மதுக்கரை, கூடலூர் ஆகிய நகராட்சிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. திமுக இத்தனை வார்டுகளில் வெற்றி பெற்ற அக்கட்சியின் அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது.

DMK, AIADMK, COIMBATORE, TNLOCALBODYELECTIONS

மற்ற செய்திகள்