என்ன ஆச்சு? குஷ்புவைத் தொடர்ந்து துரைமுருகனும் மருத்துவமனையில் அனுமதி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்தியாவில் இருக்கும் 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் தமிழ்நாட்டில் இருப்பதோ 40 நாடாளுமன்றத் தொகுதிகள்.

என்ன ஆச்சு? குஷ்புவைத் தொடர்ந்து துரைமுருகனும் மருத்துவமனையில் அனுமதி!

இவற்றுள் வேலூர் தொகுதியில் முறைகேடு காரணமாக மக்களவைத் தேர்தல், தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டதால் மொத்தம் 542 தொகுதிகளில் நாடு முழுவதும் 7 கட்டமாக நடந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் (வேலூர் நீங்கலாக) தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தொகுதிகளில் இன்று நிகழும் வாக்கு எண்ணிக்கையில், தமிழ்நாட்டைப் பொருத்தவரை 39 தொகுதிகளின் நிலவரப்படி 36 தொகுதிகளில் திமுக முன்னிலையில் இருக்கிறது. இந்த நிலையில், திமுக பொருளாளரும் மூத்த தலைவருமான துரைமுருகன் உடல்நல குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஜனவரி மாதம் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த துரைமுருகன் இம்முறை சிறுநீரகத் தொற்று  காரணமாக அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோல் காங்கிரஸ் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர், பேச்சாளர் நடிகை குஷ்பு, நேற்றைய தினம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இருப்பதாகவும், தேர்தல் கூத்துக்களை கவனிக்க முடியாமல் இப்படி ஆகிவிட்டதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார்.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் சூழலில் இவ்வாறு முக்கிய கட்சிப் பிரமுகர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது அக்கட்சியினரிடையே சற்று சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளது.

ELECTIONS, DMK, LOKSABHAELECTIONS2019, VOTECOUNTING, DURAIMURUGAN, HOSPITAL