'எடப்பாடியில் முதல்வரை எதிர்த்து இவரா'?... 'ஆச்சரியத்துடன் நிருபர்கள் கேட்ட கேள்வி'... ஸ்டாலின் சொன்ன நச் பதில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகச் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். ஸ்டாலின் கொளத்தூரிலும், முதன் முறையாக உதயநிதி சேப்பாக்கத்திலும் போட்டியிடுகின்றனர்.

'எடப்பாடியில் முதல்வரை எதிர்த்து இவரா'?... 'ஆச்சரியத்துடன் நிருபர்கள் கேட்ட கேள்வி'... ஸ்டாலின் சொன்ன நச் பதில்!

திமுக கூட்டணி கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து களம் காண்கிறது. இதில் திமுக மட்டும் 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான பட்டியல் 2 நாட்களுக்கு முன்னரே வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் இன்று வெளியிடப்பட்டது. திமுக சார்பாக 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

DMK Sampath Kumar will take on CM Palaniswami in Edappadi

இதனிடையே முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து, எடப்பாடி தொகுதியில் திமுக சார்பில் சம்பத்குமார் என்ற இளைஞர் களமிறக்கப்படுகிறார். இதனை ஸ்டாலின் அறிவித்த நிலையில், இதுகுறித்து கேட்ட செய்தியாளர்கள், 'முதல்வரை எதிர்த்து சாதாரண வேட்பாளரை நிறுத்தியுள்ளீர்களே?' என்றனர். அப்போது பதிலளித்த ஸ்டாலின், “அவர் சாதாரண வேட்பாளர் என்று யார் சொன்னது? அவர் சாதாரணமான வேட்பாளராக இருக்கலாம். ஆனால், வெற்றி வேட்பாளர்” எனக் கூறினார்.

மற்ற செய்திகள்