இட ஒதுக்கீடு குறித்த ஆர்.எஸ். பாரதியின் சர்ச்சை பேச்சு...விசிக தலைவர் கட்டுப்பட்டிருப்பது பரிதாபத்திற்குரியது... கண்டனத்தை பதிவு செய்த மக்கள் நீதி மய்யம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு குறித்து திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்ட கண்டன அறிக்கையில், அம்பேத்கர் பெற்றுத் தந்த உரிமையில் நிமிர்ந்தெழுந்தது ஒடுக்கப்பட்ட இனம். அவர் ஒடுக்கப்பட்ட இனத்துக்காக மட்டுமல்ல வர்ணாசிரம கொடுமையில் சிக்கியிருந்த பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் வழிகாட்டியவர். கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட கட்சிகள் நினைத்தாலும் அதில் கைவைத்திருக்க முடியாது.
அப்படியிருக்கையில் சட்டம் கொடுத்த வாய்ப்பை பிச்சைப் போட்டதாக திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அந்தக் கால ஜமீன் தனத்தோடு ஆணவமாகக் கருத்துக் கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
இந்த நேரத்தில் திமுகவோடு கூட்டணியில் இருக்கும் விசிக தலைவர் கட்டுப்பட்டிருப்பது பரிதாபத்துக்குரியது. இவர்கள் குணம் எப்படியானது என்பதை தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமல்ல தமிழக மக்களே உணர வேண்டிய நேரம் இது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்துள்ளது