"அரசு நிகழ்வில் ஏன் ஒரு மத பூஜை மட்டும் நடக்குது.? இது திராவிட மாடல் ஆட்சியா என்ன?" - ஆவேசமான எம்.பி சரமாரி கேள்வி வீடியோ..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அரசு நிகழ்வில் பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் திமுக எம்.பி செந்தில்குமார் ஆவேசமாக கண்டித்த வீடியோ வைரலாகி வருகிறது.

"அரசு நிகழ்வில் ஏன் ஒரு மத பூஜை மட்டும் நடக்குது.? இது திராவிட மாடல் ஆட்சியா என்ன?" - ஆவேசமான எம்.பி சரமாரி கேள்வி வீடியோ..

Also Read | "ஆஹா, இத பாத்தா அவங்க பொறாமை படுவாங்களே.." படிக்கட்டை பார்த்து வியந்த ஆனந்த் மஹிந்திரா.. "அப்படி என்ன இதுல ஸ்பெஷல்?"

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஆலாபுரம் ஏரி புனரமைக்கும் பணியின்போது அங்கு இந்து மத வழிபாட்டு முறையில் பூமி பூஜைக்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்கு திமுக எம்.பி செந்தில்குமார் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தார்.

பூஜை நடக்கும் இடத்துக்கு வந்த செந்தில்குமார் எம்.பி, “என்ன நடக்கிறது இங்கே? பூமி பூஜை நடத்துவது என்றால் நடத்துங்கள்.. அதற்காக எதற்கு ஒரு மதத்தை சார்ந்தவரை மட்டும் அழைத்து பூஜை நடத்துகிறார்கள்..? இந்து மதம் போல், கிறிஸ்தவம் மற்றும் முஸ்லிம் மதங்களில் இருந்தும் மத குருமார்களை அழையுங்கள். ஏன் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களையும் அழையுங்கள்.. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா..?” என்று கடிந்து கொண்டார்.

DMK MP questioned poojai rituals conducted by PWD officers

மேலும் பேசியவர்ம் “இதுபோன்ற நிகழ்வுகளுக்கு என்னை ஏன் அழைக்கிறீர்கள்..? இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு என்னை தயவுசெய்து கூப்பிடாதீர்கள்.. நீங்கள் அரசு அதிகாரி தானே உங்களுக்கு தெரியாதா ..? முதல்வர் சம்பந்தப்பட்ட எந்த நிகழ்விலாவது இப்படி நடக்கிறதா..? இப்படி இருந்தால் இது திராவிடர் மாடல் ஆட்சி கிடையாது என்பது உங்களுக்கு தெரியாதா..?” என்று சரமாரியாக கேள்வி கேட்டார்.

இதனை தொடர்ந்து அதிகாரிகள் உடனடியாக வருத்தம் தெரிவித்தனர். அதற்கும் அவர், "என்ன Sorry.?" என்று கூறினார். மேலும் செந்தில்குமார் எம்.பி பேசும்போது, “இது அனைவருக்குமான ஆட்சி” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன் பகிரப்பட்டு வருகிறது.

Also Read | "மக்களே Dam-ல் மழை பேஞ்சதால".. - சேட்டை சிறுவர்களின் நேரலை வானிலை ரிப்போர்ட்.. வைரல் Spoof வீடியோ

TN MP, DMK MP, GOVT OFFICERS

மற்ற செய்திகள்