"அட, நான் தான்பா கரியப்பா, என்ன ஞாபகம் இல்லையா??".. MLA-வுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நபர்.. சுவாரஸ்ய பின்னணி
முகப்பு > செய்திகள் > தமிழகம்திமுக எம்.எல்.ஏ பிரகாஷிடம் நபர் ஒருவர் வேகமாக சென்று தோளில் கைபோட்ட படி பேசிய நிலையில், இதற்கான காரணம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் தளி பிரகாஷ். இதற்கு முன் தளி தொகுதி எம்.எல்.ஏவாக இருந்ததால், தளி பிரகாஷ் என கட்சியினரால் அழைக்கப்பட்டு வருகிறார். ஒருபுறம் எம்எல்ஏவாக இருப்பதுடன் திமுகவின் மாவட்ட செயலாளராகவும் பிரகாஷ் செயல்பட்டு வருகிறார்.
அப்படி ஒரு சூழ்நிலையில், திமுகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் எம்எல்ஏ பிரகாஷை காண ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். அதே போல, ஒசூர் பகுதியில் பிரகாஷ் மீது மக்களுக்கு அதிக மரியாதையும் உள்ளது.
அப்படி ஒரு சூழ்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக கட்சியினரோடு பேசி விட்டு, திமுக எம்.எல்.ஏ பிரகாஷ் கார் ஏற சென்றதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில், அவர் அருகே வந்த நபர் ஒருவர், நான் தான் கரியப்பா என்றும் என்னை தெரியவில்லையா என்றும் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனை பார்த்த மற்ற அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து போகவே, பெலகொண்டபள்ளி கிராமத்தில் தன்னுடன் ஒன்றாக படித்த காரியப்பா என்பதை அந்த நபர் நினைவுபடுத்த எம்எல்ஏ பிரகாஷும் பழைய தருணங்களை நினைவு கூர்ந்து சிரித்துக் கொண்டே இருக்கிறார்.
தனது தொடக்க பள்ளிக் கால நண்பன் என்பதை அறிந்து கொண்டதும் கரியப்பாவின் தோளில் கைபோட்டு பேசிய பிரகாஷ், அவரிடம் நலம் விசாரிக்கவும் செய்தார். தனது பள்ளிக்கால நண்பனிடம் தோள் மேல் கைபோட்ட படி, ஜாலியாக பேசிக் கொண்டிருந்த எம்எல்ஏ பிரகாஷை கண்டு, அங்கிருந்த பலரும் வியந்து போயினர்.
இது தொடர்பான வீடியோவும் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. நட்பு தான் மிகப் பெரிய சொத்து என்பதை உணர்த்தும் வகையிலும் இந்த சம்பவம் இருப்பதாக சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்