‘தற்கொலையா..? நானா?’.. திமுக எம்.எல்.ஏ பூங்கோதைக்கு என்னதான் ஆச்சு?.. ‘அவரே வெளியிட்ட மறுப்பும் பரபரப்பு அறிக்கையும்!’
முகப்பு > செய்திகள் > தமிழகம்திமுக எம்.எல்.ஏ பூங்கோதை உடல் நலக்குறைவால் நெல்லையில் இருந்து சென்னை மருத்துவமனை அழைத்துவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக வெளியான தகவலில் அவரின் உடல் நலக் குறைவுக்கான காரணம் தற்கொலை முயற்சி என வெளியான வதந்தியை அவர் மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஆலங்குளத்தில் உடல்நல குறைவால், மயங்கி விழுந்த என்னை என்னுடைய பணியாளர்கள் உடனே மருத்துவமனையில் சேர்த்ததும், ரத்த பரிசோதனையில் சர்க்கரை அளவு குறைவாகவும் இருந்தது கண்டறியப்பட்டு, சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடந்த இந்த உண்மை சம்பவத்தை மறைத்து ஊடகங்கள் தவறாக திரித்து நான் தற்கொலை முயற்சி செய்ததுபோல் பொய்யுரைப்பது வேதனை அளிக்கிறது.
19 ஆண்டுகளாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி என்னை அமைச்சராக நியமித்து அழகு பார்த்து தன் மகளைப் போல் பாசத்துடன் நடத்தினார். அதேபோல ஸ்டாலினும் என்மீது பாசமாக இருக்கிறார். என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். தற்போது நான் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். என் தந்தைக்கும் எனக்கும் முகவரியும் முன்னேற்றமும் தந்த மாபெரும் ஜனநாயக இயக்கம் திமுக. தயவுகூர்ந்து என் உடல் நலம் குறித்த கற்பனைச் செய்திகளை ஊடகங்கள் வெளியிட வேண்டாம் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்