"பிறந்த தினத்திலேயே 'கொரோனாவால்' உயிரிழந்த நாட்டின் முதல் 'எம்.எல்.ஏ' அன்பழகன்! ஒப்பாரி வைத்து கதறி அழுத ஊர் மக்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் தனியார் மருத்துவமனையில், கடந்த 2-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில் மே 10,2020 காலை 8 மணியளவில் உயிர் பிரிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் சோகம் என்னவென்றால் 1958 ஜூன் 10- ஆம் தேதி பிறந்த ஜெ.அன்பழகனுக்கு இன்று 62 வது பிறந்தநாள். பிறந்த நாளிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
2001, 2011, 2016, சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஜெ.அன்பழகன் என்பதும், இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர் என்பதும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களுள் உயிரிழந்த இந்தியாவின் முதல் எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எம்.எல்.ஏ. அன்பழகன் மறைவு குறித்த விவரம் உள்துறை, மத்திய சுகாதாரத்துறை கவனத்திற்கு சென்றுள்ளது. ஜெ.அன்பழகனின் சொந்த கிராமமான விழுப்புரம் அருகே வெங்கமூர் கிராமத்தில் கிராம மக்கள் ஒப்பாரி வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மற்ற செய்திகள்