'திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதி...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று (17-12-2020) உடல்நலக்குறைவு காரணமாக திடீரென திருச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!

'திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதி...!

திருச்சி சென்றுள்ள திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நிலையில், அதிகளவில் காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக திருச்சியில் உள்ள மாருதி தனியார் மருத்துவமனையில் இன்று துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடும் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கட்சி நிகழ்ச்சிகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருந்த துரைமுருகன் தற்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மற்ற செய்திகள்