'துரைமுருகன் ஏழு முறை வெற்றிபெற்ற காட்பாடி தொகுதியில்...' - எதிர்பாராத அதிரடி திருப்பம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கடந்த மாதம் ஏப்ரல் 2ஆம் தேதி நடந்த சட்டமன்ற தேர்தலில் முடிவுகள் இன்று எண்ணப்படுகின்றன.
காலை ஏழு மணிக்கு வாக்குபதிவுகள் எண்ணப்பட்டு வந்த நிலையில் 11மணி நிலவரப்படி தொகுதி ரீதியாக முன்னிலையில் இருப்போரின் பட்டியல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் துரைமுருகனும், அதிமுக சார்பில் ராமு போட்டியிட்டனர்.
தற்போது வரை காட்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராமு 1,309 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார்.
இரண்டாவது சுற்றில் திமுக வேட்பாளர் துரைமுருகன் 5,609 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ராமு 6,918 வாக்குகளும் பெற்றுள்ளதும், துரைமுருகனை விட அதிமுக வேட்பாளர் ராமு 1,309 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்