அடுத்த 'சென்னையாக' மாறப்போகும் கோவை...! - 'அடுக்கடுக்கான' முதலமைச்சரின் திட்டங்கள்...! - வேகமெடுக்கும் கோவையின் வளர்ச்சி...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திமுக கடந்த தேர்தலில் கோவை மாவட்டத்தில் பத்து இடங்களில் ஒன்று கூட ஜெயிக்கவில்லை. அந்த அளவிற்கு அதிமுக கோட்டையாக கொங்கு மண்டலம் காணப்படுகிறது. ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் மட்டுமே பெருவாரியாக ஜெயித்துள்ளனர்.

அடுத்த 'சென்னையாக' மாறப்போகும் கோவை...! - 'அடுக்கடுக்கான' முதலமைச்சரின் திட்டங்கள்...! - வேகமெடுக்கும் கோவையின் வளர்ச்சி...!

இந்த நிலையில், மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடத்த அரசு தரப்பில் திட்டமிடப்பட்டது. அந்த விழாவை நடத்த செந்தில் பாலாஜியிடம் முழு பொறுப்பை வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

விழாவை முன்னிட்டு முதல்வர் படம் இல்லை. பேனர் இல்லை. தோரணங்கள் இல்லை. ஆனால்  10கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர். இது நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என்று நினைத்தால் இது ஒரு மாநாடு அளவிற்கு நடந்துள்ளது என முதல்வர் ஸ்டாலினே அமைச்சர் செந்தில் பாலாஜியை பாராட்டினார். இந்த பிரமாண்டமான விழா டிரெண்டிங் ஆகியுள்ளது.

முன்னதாக கோவை வருவதையொட்டி முதல்கட்டத்தில்  பாஜகவினர் #gobackstalin என ஹேஷ்டேக் மூலம் டிரெண்டாக்கிய நிலையில்,  உஷாரானா திமுகவினர்  #welcomestalin என பதிலுக்கு டிரெண்ட் செய்தனர். இது இந்திய அளவில் வைரலானது. கோவை திருப்பூரில் பல்வேறு தொழில் அதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை  முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்.  கொங்கு மண்டலத்தில் திமுகவின் பலத்தை அதிகரிக்க மநீமவில் இருந்து வந்த மகேந்திரனுக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டது.

மேலும், கொங்கு மண்டலத்தில் மெட்ரோ உள்ளிட்ட அடுக்கடுக்கான பல வளர்ச்சி திட்டங்களை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையை போன்று கோவையை மாற்றுவதற்கான வளர்ச்சி திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

DMK, AIADMK, KONGU

மற்ற செய்திகள்