ஸ்டாலினை தொடர்ந்து துரைமுருகன், கே.என்.நேரு... அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்ட சீனியர் தலைவர்கள்... யார் யாருக்கு என்னென்ன துறை?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
கொரோனா பரவல் காரணமாக சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் பதவியேற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது. காலை 9 மணியளவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆளுநர் மாளிகை வருகை தந்தார். இதனை அடுத்து கவர்னர் மாளிகைக்கு பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுப்புடன் வந்த மு.க ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதன்பின்னர் பதவியேற்க உள்ள அமைச்சர்களை ஆளுநருக்கு முகஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர், மு.க.ஸ்டாலிக்கு தமிழக முதலமைச்சராக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது, ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும்..’ என்று கூறி மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார்.
அவரை தொடர்ந்து 34 அமைச்சர்கள் ஒவ்வொருவராக பதவி பிரமாணம் ஏற்று வருகின்றனர். இதில் சீனியர் அமைச்சர்களான துரைமுருகன், நீா்வளத்துறை அமைச்சராக (சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டம், மாநிலச் சட்டமன்றம், ஆளுநா் மற்றும் அமைச்சரவை, தோ்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்) பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து கே.என்.நேரு, நகா்ப்புற வளா்ச்சித் துறை-நகராட்சி நிா்வாகம், நகா்ப் பகுதி, குடிநீா் வழங்கல் அமைச்சராகவும், க.பொன்முடி, உயா்கல்வித் துறை அமைச்சராகவும், எ.வ.வேலு பொதுப்பணித்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளனர்.
எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வேளாண்மைத்துறை அமைச்சராகவும், ஐ.பெரியசாமி கூட்டுறவுத்துறை அமைச்சராகவும், கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் வருவாய்த்துறை அமைச்சராகவும், தங்கம் தென்னரசு, தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை, தொல்பொருள் அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளனர்.
மற்ற செய்திகள்